சொத்துக்களை வாங்கி குவிக்கும் ஷாருக்கான் மகள்.. இப்ப வாங்கிய நிலம் இத்தனை கோடியா? ஷாக் ஆகாம படிங்க..

First Published Feb 27, 2024, 12:48 PM IST

ஷாருக்கானின் மகளும் நடிகையுமான சுஹானா கான், ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு நிலத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கபப்டும் நடிகர் ஷாருக்கான் - கௌரி கான் தம்பதியின் மகள் தான் சுஹானா கான். இவருக்கு ஆர்யன் கான் என்ற சகோதரர் இருக்கிறார். மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், ஆர்டிங்லி கல்லூரியில் உயர்கல்வியை முடித்தார்.

Shah Rukh Khan's daughter Suhana Khan

நியூயார்க்கில் உள்ள கலைக்கல்லூரியில் நடிப்பு தொடர்பான படிப்பை முடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சுஹானா கான், ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு நிலத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் பகுதியில் கிட்டத்தட்ட 1.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் கட்டப்பட்ட மூன்று கட்டமைப்புகளை உள்ளடக்கிய இடத்தை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. . நிலப்பரப்பில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் முறையே 1,218 சதுர அடி, 196 சதுர அடி மற்றும் 120 சதுர அடி பரப்பளவில் விரிந்துள்ளன.

இந்த பரிவர்த்தனைக்காக சுஹானா 57 லட்சம் ரூபாய் முத்திரை கட்டணம் செலுத்தியதாக தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை பிப்ரவரி 13, 2024 அன்று பதிவு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், சுஹானா, அலிபாக்கில் மூன்று கட்டமைப்புகளுடன் கூடிய 1.5 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தை ரூ.12.91 கோடிக்கு வாங்கினார்.

இதற்கிடையில், ஜோயா அக்தர் இயக்கத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான தி ஆர்ச்சீஸ் மூலம் சுஹானா நடிகையாக அறிமுகமானார். ஓடிடியை தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார்.

அடுத்ததாக சுஹானா தனது தந்தை ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு கிங் என்று பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. சுஜோய் கோஷ் இயக்கும் இந்த ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சித்தார்த் ஆனந்தின் மார்ஃபிக்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இதற்கிடையில், ஷாருக்கான் கடைசியாக டன்கி படத்தில் நடித்தார். ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் டைகர் vs பதான் படத்திலும் தற்போது ஷாருக்கான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!