சட்டவிரோதமாக விற்பனை செய்த டெட்டர்னேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்… 7 பேர் அதிரடி கைது!!

First Published Mar 1, 2023, 11:48 PM IST

கோவையில் சட்டவிரோதமாக டெட்டர்னேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து 1,244 டெட்டர்னேட்டர்கள் 622 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த நான்கு நபர்களை சந்தேகத்தின் பெயரில் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ், ஆனந்த், காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்றும், அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது அதில் 26 கட்டுகள் கூடிய மொத்தம் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி அவர்களிடம் போலீசார் மேல் விசாரணை நடத்தினர். அதில், சுரேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்து வரும் காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவதாகவும், மேற்படி ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடி பொருளை எவ்வித உரிமமும் இன்றி பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்துக்கு புறம்பாக கேரளாவிற்கு விற்று லாபம் சம்பாதித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ரங்கராஜ், கோபால், பெருமாள், சந்திரசேகரன் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் என மொத்தம் 1244 டெட்டர்னேட்டர் 622 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

click me!