பாண்டியன் ஸ்டோர், சிறகடிக்க ஆசை என மொத்தம் 5 சீரியலில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ நடிகர் யார் தெரியுமா?

First Published Mar 28, 2024, 11:11 PM IST

பாண்டியன் ஸ்டோர் சீரியல் முதல் மொத்தம் 5 சீரியலில் ஹீரோவாக நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த சீரியல் நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

serial TRP

சின்னத்திரையில் சீரியலில் மூலம் பிரபலமான, நடிகர் ஒருவருக்கு விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் 5 சூப்பர் ஹிட் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்த போதும், அதனை ஏற்காமல் மறுத்து விட்டதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 

அவர் வேறு யாரும் அல்ல, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கண்ட நாள் முதல்' சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமாகி பின்னர், 'இதயத்தை திருடாதே' சீரியலில் நடித்த நவீன் தான். தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரில் நடித்து வருகிறார்.

Akshitha Engagement: விஜய் டிவி சீரியல் நடிகைக்கு... நடிகருடன் நடந்த நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!

இவருக்கு விஜய் டிவியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் (கதிர்), சிறகடிக்க ஆசை, சக்திவேல், தங்கமகள், மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் போன்ற தொடரில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் வித்தியாசமான மற்றும் கிராமத்து கதைக்களம் கொண்ட சீரியலுக்காக காத்திருந்து...பின்னர் சின்ன மருமகள் சீரியலில் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivek Daughter Wedding: மறைந்த நடிகர் விவேக் வீட்டில்.. மிகவும் எளிமையாக நடந்த அவரது மகள் தேஜஸ்வினி திருமணம்!

click me!