நெல்லையில் சாதிய கொடுமையால் தாக்கப்பட்டு சாதனை படைத்த மாணவனை நேரில் சந்தித்து பாராட்டிய தாடி பாலாஜி

By Velmurugan sFirst Published May 9, 2024, 6:27 AM IST
Highlights

திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் தாக்கப்பட்ட நிலையிலும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நடிகர் தாடி பாலாஜி மாணவனை நேரில் சந்தித்து பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். 

மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியானது. அதில் கொடூர தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார். 

இந்தத் தேர்வில் அவர், தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளியல் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியில் - 85, கணினி அறிவியல் - 94 என மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும் பலரும் சின்னதுரைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தாடி பாலாஜி நெல்லைக்கு நேரில் சென்று  மாணவர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாராட்டினார். மேலும் சின்னதுரைக்கு புதிய ஆடையை பரிசாக வழங்கி எந்த உதவி வேண்டுமானாலும் கேள் செய்து கொடுக்கிறேன் என கூறி விட்டு சென்றார்.

பெண்களை இழிவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைதா? அப்போ பாதி திமுக.காரர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும் - வானதி

click me!