Vijay66: தளபதி 66 பற்றி வெளியான செய்தி பொய்...சரத்துக்குமார் போலீசாக நடிக்கவில்லை..? நடிகர் மனோபாலா விளக்கம்!

First Published May 13, 2022, 10:42 AM IST

Thalapathy 66 Update: தளபதி 66 படத்தில் சரத்குமார் காவல் துறை அதிகாரியாக நடிப்பதாக வெளியான தகவல் பொய் என்று நடிகர் மனோபாலா தெளிவு படுத்தியுள்ளார். 

Thalapathy Vijay

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 66-வது படமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷியாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

vijay66

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். 

vijay

தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 66 முழுவதும்  ஆக்ஷன், ரொமான்ஸ், எமோஷ்னலான பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

vijay

மேலும், இந்த படம் குறித்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தில் சரத்குமார் விஜய் தந்தையாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் பரவி வந்தது.  

vijay

இதையடுத்து,சரத்குமார் மற்றும் மனோபாலா தளபதி 66 படத்தில் ஷூட்டிங் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியானது. இதனால் தளபதி 66 படத்தில் சரத்குமார் போலீஸ் ரோலில் நடிக்கிறார் என தகவல் பரவியது.சரத்குமார் போலீஸ் தோரணையில் அமர்ந்திருப்பதாலும், அவர் அருகில் அமர்ந்திருப்பவரும் போலீஸ் டிரெசில் இருப்பதாலும் சரத்குமார் போலீஸ் ரோலில் தான் நடிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

vijay

இந்த போட்டோவை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள நடிகர் மனோபாலா குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ''இது முற்றிலும் பொய்யான தகவல் நாங்கள் சும்மா சந்தித்தோம். இது தளபதி 66 படப்பிடிப்பு தளம் இல்லை'' சரத்குமார் காவல் துறை அதிகாரியாக நடிக்க வில்லை என்று ட்விட் செய்துள்ளார்.

மேலும் படிக்க....Katrina Kaif pregnant: கத்ரீனா கைஃப் கர்ப்பமா? உண்மையை ஓப்பனாக சொன்ன கணவர் விக்கி கௌஷல் குழு ...

click me!