Sandhya Raagam: சிக்கிய உடை.. அதிர்ச்சியில் உறைந்த ஜானகி!! மாட்ட போவது யார்? சந்தியா ராகம் இன்றைய அப்டேட்!

First Published Mar 25, 2024, 7:53 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரமணி பார்வதி மற்றும் பத்மா ஆகியோரிடம் தனத்தின் ஸ்போர்ட்ஸ் டிரஸ் மாட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது மாயா தனம் ஜானகி என மூவரும் கோவிலுக்கு சென்றிருக்க இவர்கள் வீட்டில் இந்த ஸ்போர்ட் டிரஸ்ஸை வைத்துக் கொண்டு இது யாருடையது என சத்தம் போடுகின்றனர். மேலும் இது நிச்சயம் மாயாவோடதாக தான் இருக்கும் என தப்பாக ஒரு கணக்குப் போட்டுக் கொள்கின்றனர். 

இவர்கள் வீட்டுக்கு வந்ததும் இது யாருடைய மாயாவை பிடித்து கிட்ட மணிவண்ணன் கீழே இறங்கி வந்து அது என்னுடையது என சொல்கிறார். ஆனால் அதை நம்ப மறுத்து இது மாயாவோட இதுதான் என்று சொல்ல கிடையாது அது என்னுடைய டிரெஸ் தான், நான் தான் துவைத்து போட்டு இருந்தேன். அதை எதுக்கு எடுத்தீங்க என்று புடுங்கிக் கொண்டு ரூமுக்கு சென்று அந்த டிரஸ்ஸூடன் வெளிய வந்து இத போட்டுக்கிட்டு நான் கபடி விளையாடுவேன் கிரிக்கெட் விளையாடும் ஹாக்கி விளையாடும் காமெடி பர்ஃபார்மன்ஸ் போட தனம் ஜானகி மாயா என மூவரும் தங்களை மறந்து சிரிக்கின்றனர். 

அக்‌ஷய் குமார் - டைகர் ஷெராஃப் கூட்டணியில் உருவாகியுள்ள படே மியன் சோட்டோ மியன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பத்மா பார்வதி மற்றும் ரமணியென மூவரும் உள்ளே சென்றுவிட்டால் மணிவண்ணன் இவர்களிடம் அவ்வளவுதான் பிரச்சனை முடிந்தது. உனக்கு என்ன ஸ்போர்ட்ஸ்ல விளையாடி ஜெயிக்கணும் அதானே நீ விளையாடு இவங்களுக்கு அதெல்லாம் புரியாது என்று சொல்கிறார். 

பிறகு மாயா, தனம் ஜானகி ஆகியோர் தனியாக செல்ல ஜானகி நல்ல வேலை அண்ணன் காப்பாத்திட்டாரு இல்லன்னு என்ன ஆகி இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்க மணிவண்ணன் அங்கு வர ஜானகி அவருக்கு நன்றி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Indraja Sankar Wedding: மாமாவையே காதலித்து கரம் பிடித்த ரோபோ ஷங்கர் மகள்! இந்திரஜா பகிர்ந்த போட்டோஸ்!

click me!