Samantha : அடிக்குற வெயிலுக்கு.. உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு ஹாயாக கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா

First Published Apr 11, 2024, 12:55 PM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

samantha

கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சமந்தா. இதையடுத்து விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த சமந்தா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்தார். அப்படி தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தபோது அவர்மீது காதல் வயப்பட்ட சமந்தா, அவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

samantha Ruth Prabhu

திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் கிளாமர், ஹோம்லி என அனைத்து வேடங்களிலும் நடித்து வந்த சமந்தா, கடந்த 2021-ம் ஆண்டு தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். நாக சைதன்யாவுடனான திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து மீண்டும் சினிமாவில் பிசியான சமந்தா, பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்து அசத்தினார். தற்போது அவர் நடிப்பில் இந்தியில் சிட்டாடெல் என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Thalapathy 69 : தயாரிப்பாளருடன் மோதல்... கைமாறியது தளபதி விஜய்யின் கடைசி படம் - அப்போ 250 கோடி போச்சா?

samantha Photos

சினிமாவில் செம்ம பிசியாக நடித்து வந்த சமந்தாவுக்கு திடீரென மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகிய சமந்தா, கடந்த ஓராண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் ஓய்வு எடுத்து வந்தார். தற்போது நோய் பாதிப்பு குணமடைந்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவர், இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பதற்காக விதவிதமாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

samantha Latest Photoshoot

அந்த வகையில் தற்போது கருப்பு நிற கோட் சூட் அணிந்து அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோஷூட்டில் உள்ளாடை அணியாமல் கோட் பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சி பொங்க அவர் போஸ் கொடுத்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவா இப்படி என வாயடைத்துப் போய் உள்ளனர். சமந்தாவின் இந்த உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... சம்பளத்தை 10 மடங்கு உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்.. அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

click me!