தியேட்டரில் கூட்டமில்லை... சமந்தாவின் குஷியை ரிலீசான பத்தே நாளில் பார்சல் பண்ணி ஓடிடிக்கு அனுப்பிய படக்குழு

First Published Sep 12, 2023, 8:36 AM IST

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.

Kushi OTT release

சமந்தா - விஜய் தேவரகொண்டா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் குஷி. ஷிவா நிர்வாணா இயக்கிய இப்படம் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி திரைக்கு வந்தது. தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன குஷி திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Samantha, vijay devarakonda

இருப்பினும் வெளியான முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவித்த குஷி திரைப்படம், 3 நாள் முடிவில் ரூ.50 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. அதன்பின்னர் படிப்படியாக குஷி படத்தின் வசூல் சரியத் தொடங்கியது. அப்படம் ரிலீஸான ஒரே வாரத்தில் ஷாருக்கானின் ஜவான் படம் ரிலீஸ் ஆனதால், பெரும்பாலான இடங்களில் குஷி படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டர்களை ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ஆக்கிரமித்தது.

இதையும் படியுங்கள்... கையில் பூவோடு பரிதவித்து நின்ற அருண் விஜய்.. மனைவி சொன்ன சீக்ரெட் - தனியாக ஒரு Anniversary கொண்டாட்டம்!

Kushi movie

தெலுங்கு மாநிலங்களில் இப்படம் வசூலில் சொதப்பினாலும், தமிழ் நாட்டில் குஷி படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.9.25 கோடி வசூலித்து இருக்கிறது. அதேபோல் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் குஷி திரைப்படம் சக்கைப்போடு போட்டுள்ளது. இதனால் பிளாப் ஆகாமல் தப்பித்துள்ள இப்படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

Kushi OTT release date

குஷி திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. தற்போது தியேட்டரில் கூட்டமில்லாததால் ரிலீஸ் ஆன பத்தே நாளில் குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 6-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஓடிடியில் இப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...  நல்லா சர்க்கஸ் பண்றமா நீ... இடுப்பில் வளையத்தை மாட்டி வித்தை காட்டிய ஷிவானி - வைரல் வீடியோ இதோ

click me!