மீண்டும் மோடி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவு பெரும் மகிழ்ச்சி.! இன்னும் அதிக இடங்களை பிடிப்போம்-தமிழிசை

By Ajmal KhanFirst Published Jun 2, 2024, 6:42 AM IST
Highlights

தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறோம் என்பது உண்மை, தமிழ்நாட்டு வாக்கு வங்கியை உயர்த்து போகிறோம் என்பதும் உண்மை, தமிழகத்தில் இன்னும் கூடுதலாக வெற்றி பெறும் போகிறோம் என்பது உண்மை என தமிழிசை தெரிவித்துள்ளார். 
 

இன்னும் நிறைய இடங்களை பிடிப்போம்

சென்னை சேத்துபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு என்பது வேறு எண்கள் மட்டுமில்லாமல் மக்களின் எண்ணங்களை போல் இந்தியாவில் மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என கூறப்பட்டிருக்கிறது எனக்கு இது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் தேர்தல் கருத்துக்கணிப்பின் மீது நம்பிக்கை கொண்டு இருந்தாலும் இன்னும் நிறைய இடங்களை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறோம் என்பது உண்மை, தமிழ்நாட்டு வாக்கு வங்கியை உயர்த்து போகிறோம் என்பதும் உண்மை, தமிழகத்தில் இன்னும் கூடுதலாக வெற்றி பெறும் போகிறோம் என்பது உண்மை,

Latest Videos

தமிழ்நாட்டில் பாஜக 18% வாக்குகள் பெறும்.. IPDS நிறுவனம் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

காங்கிரஸ் கனவு பலிக்காது

கூட்டணியில் ஒரு திராவிட கட்சியின் இடம் இருந்தால் மட்டுமே வெற்றி என்கின்ற நிலைமையை மாற்றி பாரதிய ஜனதா கட்சி தனித்தன்மையோடு இன்னும் இடங்களைப் பெற இருக்கிறோம் என்பது உண்மை, இதற்கு முன்னதாகவும் திராவிட கட்சிகளின் கூட்டணி இல்லாமல் திமுக அதிமுக கூட்டணி இல்லாமல் ஒரு கூட்டணி அமைத்திருந்தோம். அதேபோல் இப்பொழுதும் நடைபெற்று இருக்கிறது இது எங்களின் வெற்றிக்கான அடித்தளம் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார். 295 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  கனவு காண வேண்டும் என்பது அவர்களுடைய உரிமை,

தமிழகம் ஆன்மிக பூமி

ஆனால் காங்கிரஸ் கட்சியின் கனவெல்லாம் நினைவாகாது அதனால்தான் கருத்துக்கணிப்பு வெளியே வந்த பிறகு அவர்கள் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து நரேந்திர மோடி கன்னியாகுமரி பயணம் தொடர்பான கேள்விக்கு  பதில் அளிக்கையில்,  முதலில் இது ஆன்மீக பூமி, தியானத்திற்கும் தவத்திற்கும் சங்க இலக்கியங்களில் இருந்து கூறப்பட்டிருக்கின்றன. எனவே தமிழக ஒரு ஆன்மீக பூமி இந்தியா மட்டும் அல்ல இந்த நாட்டின் பெருமையை உலக அரங்கில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை விமர்சனம் செய்வதற்காக மோடி ஏதோ ஷூட்டிங் செய்கிறார் என தெரிவிக்கின்றனர் இது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். 

EXIT POLL : மோடியின் விருப்பத்தை ஊடகங்கள் நிறைவேற்றியுள்ளது... ஜூன் 4-ம் தேதி உண்மை தெரியும்- முத்தரசன்

click me!