
தமிழ்நாட்டில் பாஜக 18% வாக்குகள் பெறும்.. IPDS நிறுவனம் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
தேர்தலுக்கு முன்பு பல்வேறு கருத்துக் கணிப்புகள் எழுந்தது போலவே தமிழ்நாட்டில் பாஜக 18% வாக்குகளைப் பெறும் என்று IPDS நிறுவனம் கணித்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு மாணவர்கள் உருவாக்கிய IPDS நிறுவனம் வெளியிடும் முதல் EXIT POLL SURVEY, (தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு) சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. 35 முதல் 37 தொகுதிகளில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும், பாஜக 1 முதல் 3 இடங்களை பெற வாய்ப்புள்ளது என்றும் கூறினார்கள்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
வாக்கு சதவிகிதத்தின்படி திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளின் வாக்கு சதவிகிதங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு, அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக பாஜக 18 முதல் 20 சதவிகித வாக்குகள் பெற வாய்ப்புள்ளது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.
தமிழ்நாட்டை மீண்டும் கைப்பற்றுகிறதா திமுக? இலை, தாமரை மலருமா? கருத்துக்கணிப்பு முடிவு சொல்வது என்ன?