பதிலடி கொடுக்குமா குஜராத்? டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங்!

First Published May 4, 2024, 7:23 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 52ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செயய்ப்பட்டுள்ளது. அதன்படி, மானவ் சுதர் இந்தப் போட்டியில் அறிமுகம் செய்யப்படுகிறார். மேலும், ஜோசுவா லிட்டில் இடம் பெற்றுள்ளார்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஃபாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கரண் சர்மா, ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜயகுமார் வைஷாக்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ஷாருக் கான், ராகுல் திவேதியா, ரஷீத் கான், மானவ் சுதர், நூர் அகமது, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மேலும், பெங்களுரூவில் நடந்த ஒரு போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

இதுவரையில் குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 4 வெற்றியும், 6 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆஃப் வாய்ப்பு குறைவு தான்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

இதே போன்று தான் ஆர்சிபிக்கும். இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் 3ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்துள்ளது. எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் பெறும். எனினும், பிளே ஆஃப் வாய்ப்பு குறைவு தான்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:

ரஷீத் கான் இன்னும் 3 விக்கெட்டுகள் எடுத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

தினேஷ் கார்த்திக் 2 விக்கெட்டுகள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

விருத்திமான் சகா 4 பவுண்டரி அடித்தால் ஐபிஎல் தொடரில் 300 பவுண்டரி அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

விராட் கோலி 6 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 12500 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

ராகுல் திவேதியா 22 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

ஃபாப் டூ ப்ளெசிஸ் 25 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

சாய் சுதர்சன் 75 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

click me!