மதுரையில் பெய்து வரும் தொடா் மழையால் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 படுக்கையுடன் சிறப்பு வாா்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. ஆனால் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மழைநீா் சாலைகள் உள்பட பல்வேறு இடங்களில் தேங்கி உள்ளன. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை; தனது கல்வியால் வீட்டிற்கே வெளிச்சம் கொடுத்த அரசுப்பள்ளி மாணவி
இதனால், டெங்கு காய்ச்சலுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு அமைக்கப்பட்டது. இங்கு கொசு வலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் பாதிப்புடன் வரும் குழந்தைகள், நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீா் ஆகியவையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.