Benz : லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படம்.. அதிரடியாக நீக்கப்பட்ட ரத்னகுமார்! அவருக்கு பதில் இவரா?

First Published Apr 14, 2024, 12:52 PM IST

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் இருந்து ரத்னகுமார் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரெமோ பட இயக்குனர் கமிட் ஆகி உள்ளார்.

lokesh kanagaraj

கோலிவுட்டில் செம்ம டிமாண்ட் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். இதற்கு காரணம் இவரது படங்கள் தான். மாநகரம் படத்தில் தொடங்கிய இவரது பயணம், பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக ஐந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுடன் சக்சஸ்புல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது கால்ஷீட்டுக்காக தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளில் இருந்து தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

lokesh kanagaraj, Rathna kumar

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களின் ஸ்கிரிப்ட் பணிகளில் மற்ற இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் அவருடன் ஸ்கிரிப்ட் பணிகளில் இயக்குனர் ரத்னகுமார் ஈடுபட்டு வந்தார். அவரே தலைவர் 171 படத்திலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்தில் ரத்ன குமார் இடம்பெறவில்லை என்பதை லோகேஷ் கனகராஜே பேட்டிகளில் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... Music Director Deva: தனுஷ் படத்தில் வில்லனாக நடிக்க வந்த அழைப்பை நிரகாரித்தது ஏன்? இசையமைப்பாளர் தேவா விளக்கம்

rathnakumar

அதற்கு காரணம், ரத்னகுமார் தன்னுடைய தயாரிப்பில் படம் பண்ண உள்ளதாகவும் கூறி இருந்தார் லோகி. அப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. அப்படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையது என்றும் சொல்லப்பட்டது. அப்படி அனைவரும் எதிர்பார்த்தபடியே லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் புத்தாண்டு தினமான இன்று வெளியாகி இருக்கிறது.

benz movie

அதன்படி அப்படத்திற்கு பென்ஸ் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளன. இதில் ஒரு ஷாக்கிங் தகவல் என்னவென்றால் இப்படத்தை ரத்னகுமார் இயக்கவில்லை என்பது தான். அவருக்கு பதிலாக பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்க உள்ளதாக போஸ்டரில் குறிப்பிட்டு உள்ளனர். இவர் சிவகார்த்திகேயனின் ரெமோ, கார்த்தி நடித்த சுல்தான் போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் இருந்து ரத்னகுமார் ஏன் நீக்கப்பட்டார், அவருக்கும் லோகேஷுக்கு சண்டையா என்பது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Box Office : ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை மூன்றே நாளில் தட்டிதூக்கிய ஆவேஷம் மற்றும் வர்ஷங்களுக்கு சேஷம்

click me!