Sexual Health : அதிகப்படியான உடலுறவால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இவைகளே.. அசால்டா இருக்காதீங்க!!

First Published Mar 26, 2024, 9:30 PM IST

உங்களுக்கு தெரியுமா.. பெண்கள் அதிகப்படியான உடலுறவு கொண்டால் சில பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.

செக்ஸ் திருமண வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். மனநிலையை அதிகரிக்கும் சில ஹார்மோன்கள் உடலில் உள்ளன. ஒவ்வொருவரின் உடலிலும் அதன் நிலை வேறுபட்டிருக்கலாம். அதனால்தான் சிலருக்கு செக்ஸ் ஆசை அதிகமாக இருக்கும். ஆனால் அது பெண்களின் உடலில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மேலும் பெண்கள் ஒரு நாளைக்கு பல முறை உடலுறவு கொள்வதில் கடுமையான ஆபத்து இல்லை என்கின்றனர் நிபுணர்கள். ஒரு நபர் எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கு வரம்பு இல்லை, ஆனால் ஒவ்வொரு நபருக்கும் சில உடல் குறைபாடுகள் இருப்பதால்,  அவை சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் மற்றும் பல நாட்களுக்கு உடலை சங்கடப்படுத்தலாம். எனவே, அதிகப்படியான உடலுறவு காரணமாக பெண்கள் சந்திக்கும் சில பொதுவான பிரச்சனைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..

பிறப்புறுப்பு வீக்கம்: அதிகப்படியான செக்ஸ் காரணமாக யோனியில் வீக்கம் ஏற்படுகிறது. இது உடலுறவை வலிமிகுந்ததாக ஆக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலுறவின் போது வலி ஏற்படும் போது,   நீங்கள் உடனடியாக அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உடலை மீட்டெடுக்க நேரம் கொடுப்பது மிகவும் நல்லது.

பிறப்புறுப்பு வறட்சி: நீண்ட முன்விளையாட்டு மற்றும் உடலுறவு காரணமாக, யோனியின் இயற்கையான லூப் குறையத் தொடங்குகிறது. ஏனென்றால், அதிக உடலுறவுக்குப் பிறகு, உடல் லூப்ரிகேஷனை உற்பத்தி செய்ய முடியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உடலுறவு மிகவும் வேதனையானது. நீங்கள் உடலுறவில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்கான அறிகுறி இது.

பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள்: அதிகப்படியான உடலுறவு காரணமாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பை மற்றும் பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. ஏனெனில் இதன் காரணமாக பிறப்புறுப்பின் இயற்கையான pH அளவு குறையத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு ஏற்பட்டாலோ, சரியாக சிறுநீர் கழிக்க முடியாமலோ, துர்நாற்றம், அரிப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

click me!