நிர்வாணமாக தூங்க அடம்பிடிக்கும் கணவன்.. அதுக்கு வேலைக்கார பெண் சொன்ன விஷயம்.. குமுறும் பெண்

First Published Jun 17, 2024, 9:30 PM IST

தினமும் நிர்வாணமாக தூங்க விரும்பும் கணவரால் பல சிக்கல்களை சந்திக்கும் பெண்ணின் சோக கதையும் அதற்கு தகுந்த ஆலோசனையும் இங்கு காணலாம். 

"எங்களுக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கத் தொடங்கினோம். அவரிடம் ஒரேயொரு பிரச்சினையைத் தவிர எனக்கு வேறு குறை எதுவும் இல்லை. தினமும் என் கணவர் நிர்வாணமாக தூங்குவதை தான் விரும்புகிறார். எனக்கு அது வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக வேலைக்கார பெண் வரும்போது காலையில் எனக்கு சங்கடமாகிவிடுகிறது. 

இப்படி அவர் உறங்குவதால் வேலைக்கார பெண் அந்த அறைக்குள் செல்ல மறுத்துவிட்டார். இது எனக்கு மிகவும் அவமானமாகவும் சங்கடமாகவும் இருந்தது. இதைப் பலமுறை அவருக்கு விளக்க முயற்சித்தேன். இருப்பினும் உடைகளுடன் தூங்க முடியாது என மறுத்துவிட்டார். இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என அந்த பெண் கூறியுள்ளார். 

இதையும் படிங்க:  கணவருடன் அப்படி இருக்கும்போது கூட முன்னாள் காதலனின் ஞாபகம்.. குழம்பி தவிக்கும் பெண்ணுக்கு தீர்வு!! 

மனநல ஆலோசகர் கூறிய பதில் பின்வருமாறு:"நிர்வாணமாக உறங்குவது நல்ல விஷயம் தான்.  பல ஆய்வுகள், இரவில் நம் உடலை  சுவாசிக்க விடுவது நல்லது என கூறுகின்றன. இறுக்கமான உடைகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இது எல்லாருக்கும் பொருந்தாது. தினமும் காலையில் உங்கள் வீட்டுக்கு ஒரு வேலைக்கார பெண் வருவதால், இந்த நிர்வாண உறக்கம் அவருக்கும் ஒரு தொந்தரவாக அமையக் கூடும். இதற்கு முதன்மையான தீர்வு உள்ளே இருந்து பூட்டிய அறையில் தூங்கலாம். 

இதையும் படிங்க: Relationship Tips : இந்த குணம் உள்ளவர்களிடம் காதல், டேட்டிங் என்று மாட்டிக்காதீங்க.. அவ்ளோதா சொல்லுவ..!

வேலைக்கார பெண்ணுக்கு இது எல்லா வகையிலும் சங்கடமானது. அசௌகரியமானது. குறிப்பாக ஏதேனும் தவறு நடந்தால், அந்த வேலைக்கார பெண் உங்கள் கணவர் மீது தவறான நடத்தைக்காக புகாரளிக்கலாம்.  உங்களுடைய கணவருக்கு தோல் பிரச்சினை இருந்தால் நிர்வாண தூக்கம் ஒரு பழக்கமாகிவிட்டால், காலையில் சீக்கிரம் எழுந்து வேறு அறைக்குச் சென்று உறங்குவது நல்லது. அந்த அறையை பின்னர் நீங்களே சுத்தம் செய்யலாம். இதற்கு வேறு தீர்வுகள் இல்லை. மனதை குழப்பி கொள்ளாதீர்கள். உங்கள் கணவரிடம் உரையாடுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!