Karur Accident: கரூர் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற சுற்றுலாப் பேருந்து மீது டாரஸ் லாரி மோதி ஒருவர் பலி

By Velmurugan sFirst Published Jun 24, 2024, 11:46 AM IST
Highlights

கரூர், சேலம் பைபாஸ் சாலையில் பழுதாகி நின்ற சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பேருந்தை சரி செய்து கொண்டிருந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் - சேலம் பைபாஸ் மண்மங்கலம் அருகே திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று, நள்ளிரவு 1 மணி அளவில் புதிய மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட  தற்காலிக சாலையில் பழுதாகி நின்றது. பேருந்தை, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 50) மற்றும் மோகனூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (46). ஆகியோர் அதிகாலை 5 மணி அளவில் பேருந்தின் பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது, அதே திசையில் கரூர், சேலம் பைபாஸ் சாலையில் அதிமேகமாக வந்த, டாரஸ் லாரி பேருந்தின் பின்புறமாக மோதியது. பழுதை சரி செய்து கொண்டிருந்த நித்தியானந்தம் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தில் பெரியசாமி, லாரி ஓட்டுநர் ஜெயபாண்டி ஆகிய இருவரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Latest Videos

கிட்டார் வாசித்தபடி 1 மணி நேரம் வாளை சுழற்றிய சிறுவன்; 8 வயதில் உலக சாதனை படைத்து அசத்தல்

கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 5 மணி அளவில் ஏற்பட்ட சாலை விபத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து  சுற்றுலா பேருந்து ஓட்டுனர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை சேர்ந்த ராஜா புகாரின் பேரில்,  லாரி ஓட்டுனர் ஜெயபாண்டி மீது, வழக்குப்பதிவு செய்து வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bomb Threat : கோவை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு.?இ மெயிலில் வந்த மிரட்டல்-களத்தில் இறங்கிய பாதுகாப்பு படை

கரூர் அருகே அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்திற்கு நெடுஞ்சாலை மேம்பால பணிகள் மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனமும், அப்பகுதியில், பணியில் இருந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரின் கவன குறைவு விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது.

click me!