கரூர் மாவட்டம் குளித்தலையை அருகே உள்ள வயலூர் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (65). இவரது பேரன் திருக்குமரன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
கரூர் அருகே ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது மின்சாரம் பாய்ந்து தாத்தா சீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையை அருகே உள்ள வயலூர் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (65). இவரது பேரன் திருக்குமரன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் ஃபேன் சுவிட்ச் பிளக் மாட்டும் போது திருக்குமரன் மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது தாத்தா சீனிவாசன் காப்பாற்ற முயற்சி ஈடுபட்டார். இதனால், மின்சாரம் பாய்ந்தது. அப்போது தாத்தா சீனிவாசன் காப்பாற்ற முயற்சி ஈடுபட்டார். அப்போது தாத்தாவும், பேரனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இவர்களை காப்பாற்ற முயன்ற திருக்குமரனின் தாயார் ரேவதி மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இறுதியாக மின்சார இணைப்பை துண்டித்த பிறகு ரேவதியை மட்டும் காப்பாற்றினர். மின்சாரம் தாக்கி காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் தாத்தா பேரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.