என் மீதான பொய் பிரசாரங்களைக் கடந்து கரூர் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் அடுத்த தளவாபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுவிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வெற்றி சான்றிதழை பெற்றார். அதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் காமராஜர் சிலைகளுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
undefined
அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, 1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் கரூர் தொகுதி மக்கள் எனக்கு மகத்தான வெற்றியை தந்துள்ளார்கள்.
Sowmiya Anbumani: இறுதி நிமிடம் வரை நீடித்த திரில்; நூலிழையில் வெற்றியை தவறவிட்ட சௌமியா அன்புமணி
கடந்த ஓராண்டாக பணம் செலவு செய்து என் மீது தொடர்ந்து பொய் பிரசாரம் நடத்தப்பட்டது. அதனையும் மீறி வெற்றி பெற்றுள்ளேன். ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகி உள்ளன. நிச்சயமாக இந்தியா கூட்டணி தான் மத்தியில் ஆட்சி அமைக்கும். இதுவரை மோடி அரசுக்கு எதிராக போர் நடத்தினோம். நாளை முதல் மத்தியில ஆட்சி அமைப்பதற்காக போராட இருக்கிறோம் என்றார்.