கரூர் மாவட்டத்தில் வெப்பம் தாங்காமல் வீட்டிற்கு வெளியில் படுத்திருந்த பெண்களின் கழுத்தில் டார்ச் லைட் அடித்து பார்த்து நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த மாரிகவுண்டன்பாளையம் கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் கோடை வெயில் காலம் என்பதால் வீட்டை பூட்டி விட்டு முன்புறம் உள்ள முற்றத்தில் கட்டில் போட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து உள்ளே சென்ற அந்த மர்ம நபர் தூங்கும் பெண்களின் கழுத்தில் தங்க நகைகள் இருக்கிறதா என்று டார்ச் லைட் அடித்து பார்த்துச் சென்றுள்ளான்.
undefined
வேட்டியை சுருட்டி கட்டிக் கொண்டும், சட்டையை கழட்டி முகம் தெரியாமல் இருக்க துணியை கட்டிக் கொண்டு அரை நிர்வாணத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோட்டமிட்டுச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு தற்கொலை; தமிழக அரசு எப்போது தான் விழிக்கும்? அன்புமணி காட்டம்
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில் இக்காட்சிகளை கொண்டு வாங்கல் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொள்ளை முயற்சி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.