அடிக்குற வெயிலுக்கு அடுப்பு இல்லாம பிரியாணியே கிண்டலாம்போல; சாலையில் ஆம்லேட் போட்ட இளசுகள்

By Velmurugan s  |  First Published Apr 24, 2024, 10:42 PM IST

கரூர் மாவட்டத்தில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க கரூர்  மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுறுத்தியுள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிக்கையில், தமிழ்நாட்டின் கரூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 23.4.2024 மற்றும் 24.4.2024 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

கோவையில் தடுப்பணையில் மூழ்கிய 3 சிறார்கள்; வெப்பம் தாங்காமல் நீர் நிலைக்கு சென்றபோது சோகம்

கரூர் மாவட்டத்தில் பொதுவாகவே ஆண்டுதோறும் மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலங்களில் வெயில் கொளுத்தி எடுக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்து இன்று 107 டிகிரி  வரை வெப்பம் உயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் உச்சமாக 107 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 

இதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால் அப்பகுதியில் இயங்கும் எண்ணற்ற கல்குவாரிகளால் பூமியில் தோண்டப்பட்ட மெகா பள்ளங்கள். மேலும் கரூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் கேட்பாரின்றி வெட்டி சாய்க்கப்பட்டது. அதனால் தான் இன்று வெப்ப அலை வீசும் அளவிற்கு கரூர் மாவட்டம் வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். 

கோலாகலமாக நடைபெற்ற கூத்தாண்டவர் கோவில் விழாவில் தாலியை அறுத்துக் கொண்டு ஒப்பாரி வைத்த திருநங்கைகள்

பொதுமக்கள் உங்களை காத்துக் கொள்ள அதிக அளவு தண்ணீரும், இயற்கையான பழங்களும், காய்கறிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தேவை இல்லாமல் வெயிலில் முதியோர், கர்ப்பிணி பெண்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வெயிலில் வெளியே செல்வதோ விளையாடுவதை பெற்றோர்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

இதனிடையே இளைஞர்கள் சிலர் கோழி முட்டை சாலையில் ஊற்றி ஆம்லேட் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

click me!