வி.சி.க.வுக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்த மாமன்னன்; திருமாவுக்கு விழா எடுத்து கொண்டாடிய இளம் பெண்கள்

By Velmurugan s  |  First Published Jun 24, 2024, 12:04 PM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்ததற்கும், எம்.பி. ஆனதற்கும் தருமபுரி மாவட்டத்தில் விசிக தொண்டர்கள் விழா நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தனித் தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றது. இரு தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்ற அக்கட்சிக்கு மாநில அந்தஸ்தும் கிடைத்துள்ளது. இதனை அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்  பெற்றதற்கும், எழுச்சித் தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் தருமபுரி கிழக்கு மாவட்டம் மாணவர் அணி சார்பில் மாரப்பநாய்க்கன்ப்பட்டி கிராமத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

கரூர் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற சுற்றுலாப் பேருந்து மீது டாரஸ் லாரி மோதி ஒருவர் பலி

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று மாவிளக்கு மற்றும் மேள தாளத்துடன் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் வானவேடிக்கையுடன் நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அப்பகுதியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து  எழுச்சித் தமிழர் வாழ்க, அம்பேத்கர் வாழ்க என வெற்றி கோஷத்துடன்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிட்டார் வாசித்தபடி 1 மணி நேரம் வாளை சுழற்றிய சிறுவன்; 8 வயதில் உலக சாதனை படைத்து அசத்தல்

மாவட்ட மாணவரணி செயலாளர் திருநாள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சி. கே. சாக்கன்சர்மா கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில்  பொறுப்பாளர்களும், ஊர் பொதுமக்களும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

click me!