Sowmiya Anbumani: இறுதி நிமிடம் வரை நீடித்த திரில்; நூலிழையில் வெற்றியை தவறவிட்ட சௌமியா அன்புமணி

By Velmurugan s  |  First Published Jun 4, 2024, 9:51 PM IST

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்று தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டார்.


நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார். இவரை ஆதரித்து அவரது கணவர் அன்புமணி, மகள்கள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Coimbatore Constituency: சொல்லி அடித்த திமுக; கோவையில் 500 பேருக்கு ஆடு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

Latest Videos

சௌமியா அன்புமணியை எதிர்த்து திமுக சார்பில் ஆ.மணி, அதிமுக சார்பில் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயார் உள்ளிட்டோர் களம் கண்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சௌமியா அன்புமணிக்கும், ஆ.மணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் சௌமியா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியாக மணி 20 ஆயிரத்து 396 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கினார்.

மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன்; வாடிய முகத்தோடு வெளியேறிய நயினார் நாகேந்திரன்

இதனிடையே சௌமியா மொத்தமாக 4 லட்சத்து 8 ஆயிரத்து 173 வாக்குகளும், மணி 4 லட்சத்து 28 ஆயிரத்து 569 வாக்குகளும், அசோகன் 2 லட்சத்து 91 ஆயிரத்து 177 வாக்குகளும், அபிநயா 64 ஆயிரத்து 470 வாக்குகளும் பெற்றனர்.

click me!