Mass Suicide: குடும்பத்தையே சிதைத்த கடன் தொல்லை? தருமபுரியில் 2 சிறுவர்களுடன் தாய் தற்கொலை, கணவன் கவலைக்கிடம்

Published : May 31, 2024, 02:24 PM IST
Mass Suicide: குடும்பத்தையே சிதைத்த கடன் தொல்லை? தருமபுரியில் 2 சிறுவர்களுடன் தாய் தற்கொலை, கணவன் கவலைக்கிடம்

சுருக்கம்

தருமபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மணிக்கட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன் (வயது 36). இவரது மனைவி நந்தினி(26). இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் என 2 ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதனிடையே கடந்த 4 நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும் இன்றை தினம் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

தொண்டையில் சிக்கிய புரோட்டா; மூச்சு திணறி உயிரிழந்த கட்டிட தொழிலாளி - குமரியில் பரபரப்பு

அப்போது நந்தினி, 2 மகன்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். மேலும் சிவன் சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிவனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கல்லால் அடித்து கொல்லப்பட்ட ஜிம் பயிற்சியாளர்; கொலையாளிககளின் வீடுகளை சூறையாடிய மக்கள் - புதுவையில் பரபரப்பு

மேலும் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வரும் சிவன் அளக்கு அதிகமாக கடன பெற்று கடன் சுமையில் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாம்பை கழுத்தில் போட்டு கொண்டு டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர்! அலறி ஓடிய குடிமகன்கள்!
தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு…