அசுர வேகத்தில் கீழே இறங்கிய தனியார் பேருந்து; திடீரென குறுக்கே பாய்ந்த லாரி - தருமபுரியில் கோர விபத்து

By Velmurugan s  |  First Published May 2, 2024, 10:58 AM IST

தருமபுரியில் பாலத்தில் இருந்து கீழே இறங்கிய தனியார் பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தருமபுரி மாவட்டத்தை  சேர்ந்த தேவராஜ் மற்றும் அவருடைய  மகன் சபரி ஆகியோர் கடந்த 30ம் தேதி காஞ்சிபுரத்துக்கு வைக்கோல் ஏற்ற தருமபுரியில் இருந்து ஈச்சர் லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சு பள்ளிப்பட்டு அருகே உள்ள  தருமபுரி மேம்பாலம் அருகே வாகனம் வந்து கொண்டிருந்தது.

Tap to resize

Latest Videos

தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம் கூட காணாமல் பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்.! புதுக்கோட்டையில் சோகம்

அதேபோல திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து NNB என்ற தனியார் பேருந்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தருமபுரி மேம்பாலத்தின் கீழ்  இறங்கும் போது திடீரென ஈச்சர் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

40க்கும் 21க்கும் கள்ளத்தொடர்பு! உல்லாசத்துக்கு தந்தை இடையூறு! சத்தமே இல்லாமல் கதையை முடித்து நாடகமாடிய மகள்!

இந்த விபத்தில் சபரி, தேவராஜ் மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்த விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!