தேர்தல் பிரச்சாரம் முடிந்து களைப்புடன் வந்த பாட்டி சௌமியா அன்புமணியை பேத்தி இகம் உற்சாகப்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது.
பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி நேரடியாகப் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதி என்னும் அந்தஸ்தை தருமபுரி தொகுதி பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் திமுக சார்பாக ஆ.மணி, அதிமுகவில் டாக்டர்.அசோகன், பாஜக கூட்டணியில் பாமக சார்பாக சௌமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர்.அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் அம்மாவுக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல் மகளான சம்யுக்தா கடந்த வாரத்தில் சில நாட்கள் தன் குழந்தைகளான அகிரா, மிளிர் ஆகியோருடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
2-வது மகளான சங்கமித்ரா தன் கணவர் ஷங்கர் பாலாஜியுடன் வந்து தொகுதியிலேயே தங்கியிருந்து பிரச்சாரம் செய்து வருகிறார். 3-வது மகள் சஞ்சுத்ராவும் தொகுதியில் தங்கியிருந்து பிரச்சாரம் செய்து வந்தார். பாமக வேட்பாளரின் மகள்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சோர்வுடன் வீட்டுக்கு வந்த அவரை பேத்தி இகம் வரவேற்று உற்சாகப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட சௌமியா அன்புமணி, நேற்று, தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் முடிந்து வீட்டிற்கு வந்த எனக்கு, மிகுந்த உற்சாகம் தந்து வரவேற்ற எனது பேத்தி இகம்” என்று பதிவிட்டுள்ளார்.
Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..