பென்னாகரம் அருகே திமுக நிர்வாகி காவல் ஆய்வாளருக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆங்காங்கே கூட்டமாக நின்ற பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார். அப்பொழுது அங்கே இருந்த திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பி.தர்மச்செல்வன், மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
இதனால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ், என்னை போ என சொல்ல நீங்கள் யார் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தர்மசெல்வன் "ஆட்சி எங்களுடையது, இன்று ஒரு நாள் தான் தேர்தல், நாளை நான் யார் என காட்டுகிறேன்' என மிரட்டும் தோனியில் பேசினார்.
நான் பணம் வழங்கியதாக நிரூபித்தால் அந்த நிமிடமே அரசியலைவிட்டு விலகுகிறேன் - அண்ணாமலை அதிரடி
என்னுடைய பெயர் சுரேஷ், நான் ஒகேனக்கல் இன்ஸ்பெக்டராக உள்ளேன், நான் எங்கு சென்றாலும் இன்ஸ்பெக்டர் தான், எனது டூட்டியை நான் செய்கிறேன். என்னை, போ, கிளம்பு பாத்துக்கலாம் என்பது போன்ற பேச்சுக்கள் என்னிடம் வேண்டாம் என தெரிவித்தார். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. நான் அரசு பணியாளர் என தெரிவித்தார்.