சூப்பர் திட்டம்.!! 10ஆயிரம் கி.மீட்டர் ஊரக சாலைக்கு அடித்தது ஜாக்பாட்- சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Jun 24, 2024, 11:41 AM IST

இரண்டு ஆண்டுகளில்  முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 


110 விதியின் கீழ் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கிராமப்புறச் சாலைகள் திட்டம் குறித்து 110 விதியின் கீழ் அறிக்கை அளித்தார். அதில், தமிழ்நாட்டில் சுமார் 1 இலட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை இப்போது நான் வெளியிட விரும்புகின்றேன். ஊரகச் சாலைகளில் செய்யப்படும் முதலீட்டிற்கும் ஊரக மக்களின் நலனிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப் பகுதிகளில் வணிகச் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. 

Latest Videos

அதன்மூலம், இடுபொருள் செலவினைக் குறைத்து வேளாண் உற்பத்தியினை அதிகரித்து, ஊரக வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது தரமான சாலைகள், கிராமப்புற மக்களின் வருமான அளவினை உயர்த்துகிறது. கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி, அறிவாற்றலைப் பரவலாக்கி சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியைத் துரிதப்படுத்த உதவுகிறது. எனவேதான், பேருந்து செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், பல்வேறு முக்கிய சேவைகளைக் கிராமங்களுடன் இணைக்கும் சாலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு நமது அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி கடந்த 13-01-2023 அன்று என்னால் சட்டப்பேரவையில் "முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 

இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார்... இந்த தம்பியின் மறுபக்கத்தை அண்ணாமலை இனி பார்ப்பார்- திருச்சி சூர்யா சவால்

10,000 கி.மீட்டர் சாலை- 4,000கோடியில் மேம்படுத்தப்படும்

இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு - ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழும் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரத்தி 596 கி.மீ நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு 9 ஆயிரத்தி 324 கோடியே 49 லட்சம் ரூபாய் இதனை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் . வருகிற இரண்டு ஆண்டுகளில் "முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்” மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Vikravandi : சூடு பிடிக்காத விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! காரணம் என்ன.? களத்தில் எத்தனை பேர் போட்டி தெரியுமா.?

click me!