பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்தம் வருகிறதா..? காரணம் தெரியுமா..?

First Published Feb 27, 2024, 3:14 PM IST

பல் துலக்கும்போது பற்களில் இருந்து ரத்தம் வருவதற்கு என்ன காரணம்? அப்படி நடந்தால் என்ன டிப்ஸ் பின்பற்ற வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்..

பல் ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதனால் பற்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இந்நிலையில், ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு முக்கிய பல் பிரச்சனைகளில் ஒன்றாகும். 
 

நம்மில் பலர் பல் துலக்கும்போது இரத்தப்போக்கு பிரச்சினையை எதிர்கொள்கிறோம். அப்படியென்றால் பல் துலக்கும்போது பற்களில் இருந்து ரத்தம் வருவதற்கு என்ன காரணம்? அப்படி நடந்தால் என்ன டிப்ஸ் பின்பற்ற வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்..
 

நிபுணர்களின் கூற்றுப்படி, ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் ஈறுகளில் வீக்கம் காரணமாக பல் துலக்கும்போது இரத்தம் வரும். இவை ஈறு நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. ஈறு நோய் பீரியண்டால்ட் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயில், பற்களைச் சுற்றியுள்ள ஈறுகள் மற்றும் எலும்புகளில் தொற்று ஏற்படுகிறது. இதனால் அதைச் சுற்றி பிளேக்குகள் உருவாகின்றன. இதனால் தான் பற்களில் இரத்தம் வருகிறது.

இதையும் படிங்க:  இரவில் பல் துலக்கவில்லை எனில் மாரடைப்பு ஏற்படுமாம்.. புதிய ஆய்வில் எச்சரிக்கை..

பெண்களுக்கு பருவமடைதல், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சியின் போது ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே இதற்குக் காரணம். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கூட ஈறுகளில் இருந்து ரத்தம் வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஸ்டீராய்டு மருந்துகள் அல்லது கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:  உங்கள் பற்கள் உறுதியாக, நீண்ட காலம் நீடிக்க இவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது!!

இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது பல் துலக்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சரிவிகித உணவை உண்ணுங்கள். இரத்தப்போக்கு ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை அணுகுமாறு நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், புகைபிடித்தல் மற்றும்  சூயிங்கம் போன்ற பழக்கங்கள் இருந்தால், உடனடியாக அதை நிறுத்துங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!