Vishal about Varalaxmi : வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் பற்றிய கேள்வி; ஒளிவு மறைவின்றி ஓப்பனாக பதிலளித்த விஷால்

First Published Apr 15, 2024, 10:27 AM IST

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், அதுபற்றி நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

Actor Vishal

தமிழ் திரையுலகில் செல்லமே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். இதையடுத்து தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு என அடுத்தடுத்து மாஸ் ஹிட் படங்களில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். விஷாலை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய இயக்குனர்களில் ஹரியும் ஒருவர், அவர் இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பின.

Rathnam

இதையடுத்து அந்த காம்போ தற்போது மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. அவர்கள் கூட்டணியில் ரத்னம் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இது வருகிற ஏப்ரல் 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... KPY Bala : முன்னணி மாஸ் நடிகரின் உதவியால் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் KPY பாலா... குவியும் வாழ்த்துக்கள்

Vishal, Varalaxmi

அந்த வகையில் ரத்னம் படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் விஷாலிடம் வரலட்சுமி சரத்குமார் பற்றியும் அவருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்தது பற்றியும் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விஷால், வரலட்சுமியை நினச்சு ரொம்பவே சந்தோஷப்படுறேன். தெலுங்கு திரையுலகில் அவருக்கு நல்ல மார்க்கெட் உருவாகி இருக்கிறது. திமிரு திரைப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கேரக்டரை பார்த்து மெய்சிலிர்த்து போன எனக்கு அதன்பின்னர் ஹனுமன் படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் மெய்சிலிர்க்க வைக்கும்படி இருந்தது. 

Vishal about varalaxmi sarathkumar

அவர் கெரியரை தாண்டி அவரது வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல இருப்பது சந்தோஷம் தான்” என விஷால் பேசி இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதல் பாதியிலேயே முறிந்து போனதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தான் நிகோலாய் என்பவரை காதலிக்க தொடங்கிய வரலட்சுமி அவரை விரைவில் கரம்பிடிக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... "குணசேகரன் ஜெய்ச்சுகிட்டே இருக்காரு".. வெறுப்பில் எதிர்நீச்சல் Fans - திட்டி தீர்க்கப்படும் திருச்செல்வம்!

click me!