Ramcharan : ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் ராம்சரண்! ஆத்தாடி அவரின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

First Published Mar 27, 2024, 10:05 AM IST

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் சொத்து மதிப்பு குறித்தும் அவரின் சம்பள விவரம் குறித்தும் தற்போது பார்க்கலாம்.

ram charan chiranjeevi

தெலுங்கு திரையுலகில் மெகாஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம்சரணும் ஹீரோவாக கலக்கி வருகிறார். டோலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த ராம்சரண், ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பேமஸ் ஆனார். அப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ராம்சரணின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

Ramcharan

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு முன்பு வரை ரூ.35 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த ராம்சரண், தற்போது தன் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டார். அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ராம்சரண் நடிப்பில் தற்போது கேம் சேஞ்சர் என்கிற பிரம்மாண்ட படம் உருவாகி இருக்கிறது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Ramcharan Birthday

இந்நிலையில், நடிகர் ராம்சரண் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திரைப்பிரபலங்களும் ராம்சரணுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராம்சரணின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Game Changer : ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங்... ராம்சரண் ரசிகர்களை மெர்சலாக்கிய கேம் சேஞ்சர் பர்ஸ்ட் சிங்கிள்

Ramcharan Net Worth

சமீபத்திய தகவல்படி நடிகர் ராம்சரணுக்கு ரூ.1370 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக ஐதராபாத்தில் 25 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட வீடு ஒன்றும் உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு  மட்டும் ரூ.40 கோடி இருக்கும் என சொல்கிறார்கள். 

கார்கள் மீது அலாதி பிரியம் கொண்ட ராம்சரண் ஏராளமான கார்களையும் வாங்கி குவித்து வைத்திருக்கிறார். இவரிடம் ரேஞ்ச் ரோவர், ஆடி மார்ட்டின் வி8 வான்டேஜ், ஆஸ்டன் மார்ட்டின், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், ஃபெராரி போர்டோபினோ போன்ற சொகுசு கார்கள் உள்ளன. குறிப்பாக இவரின் பேவரைட் காரான மெர்சிடிஸ் மேபேஜ் GLS 600 காரின் விலை மட்டும் சுமார் 4 கோடி இருக்கும்.

Ramcharan Salary

படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமும் பலகோடி சம்பாதித்து வருகிறார் நடிகர் ராம்சரண். இவர் கிட்டத்தட்ட 34 பிராண்டுகளின் அம்பாசிடராக இருந்து வருகிறார். விளம்பரத்தில் நடிக்க மட்டும் இவர் ரூ.1.8 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர நடிகர் ராம்சரண் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் True Jet என்கிற விமான நிறுவனமும் இவர் சொந்தமாக வைத்திருக்கிறார்.

ramcharan wife upasana

இப்படி ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழ்ந்து வரும் ராம்சரணுக்கு கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் ஆனது. திருமணமாகி 11 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு தான் தங்களது முதல் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு கிளின் காரா என பெயரிட்டுள்ளனர். தன் மகள் பிறந்த பின்னர் நடிகர் ராம்சரண் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... CSK வீரருடன் காதலா? காட்டுத்தீ போல பரவிய தகவல்; வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

click me!