வடிவேலு.. கவுண்டமணிக்கு கிடைக்காத ஜாக்பார்ட் வாய்ப்பு! கூப்பிட்டு கொடுத்த ரஜினி.! முடியாதுனு சொன்ன செந்தில்!

First Published Jan 30, 2024, 7:41 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காமெடி நடிகர் செந்திலை அழைத்து... ஜாக்பார்ட் வாய்ப்பு ஒன்றை கொடுத்த போதும், அதனை நிராகரித்து விட்டதாக அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

கோலிவுட் திரையுலகில் காமெடியை விரும்பும் ரசிகர்களுக்கு செந்தில் - கவுண்டமணி காம்பினேஷனில் உருவான அனைத்து காமெடி காட்சியும் ஃபேவரட் லிஸ்டில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 90-களில் இவர்களுடைய காமெடி காட்சியை தங்களுடைய படங்களில் இடம்பெற வேண்டும் என்பதில் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் குறியாக இருந்தனர்.

Senthil

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வெடித்த பிரச்சனையால் இருவரும் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து விட்டனர். தற்போது செந்தில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் நிலையில், கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

Dhanush D51 Shooting: தனுஷின் படப்பிடிப்பால்... கடுமையான போக்குவரத்து பாதிப்பு..! பொதுமக்கள் அவதி..!

நடிகர் செந்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படம் அடுத்த மாதம் (பிப்ரவரி 9-ஆம் தேதி) ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் படக்குழுவினர் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள்.
 

அந்த வகையில் நடிகர் செந்தில் சம்பீத்தில் கொடுத்த பேட்டியில்... ரஜினிகாந்த் அவர் படத்தை தயாரிக்க தனக்கு வாய்ப்பு தந்ததாக கூறியுள்ளார். ஒரு நாள் திடீர் என ரஜினி தன்னை கூப்பிட்டு, நான் உங்களுக்கு கால்சீட் தருகிறேன் நீங்கள் என்னை வைத்து ஒரு படம் தயாராயுங்கள் என்று கூறினார். ஆனால் வேண்டாம் சார், எனக்கு உங்களுடன் நடிப்பதே போதும் என கூறி அவர் கொடுத்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸுக்கு பின் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் முட்டி கொண்ட தினேஷ் - விசித்ரா! வெளியேறிய பிரபலம்!

ஒரு வேலை சூப்பர் ஸ்டார் கொடுத்த வாய்ப்பை ஏற்று கொண்டு நான் அவரின் படத்தை தயாரித்திருந்தால், மிகப்பெரிய பணக்காரராகி இருக்கலாம். ஆனால் எனக்கு என்றுமே அது போன்ற எண்ணம் இருந்தது இல்லை. இருப்பதை கொண்டே மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். வடிவேலு, கவுண்டமணிக்கு கூட ரஜினிகாந்த் இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!