அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் ஊத்தப்போகுதாம் மழை.. பொதுமக்களை அலறவிடும் வானிலை மையம்!

First Published Dec 22, 2023, 9:26 AM IST

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

tamilnadu rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து பொதுமக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியது. 

chennai Rain

இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29  - 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 -25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

Tamilnadu Rain Alert

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 

click me!