Pongal 2024: இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது..? முழுதகவல்கள் இதோ!

First Published Jan 4, 2024, 12:13 PM IST

Pongal 2024: அறுவடை திருநாளான பொங்கல் அன்று வழிபட சிறந்த நேரம் குறித்த முழுதகவல்களை நாம் இங்கு பார்க்கலாம்.

தைப்பொங்கல் தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதுபோல், ஆடியில் விதைத்ததை தையில் அறுவடை செய்து அந்த அரிசியுடன், சர்க்கரை கலந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்குப் படைப்பார்கள். இதைதான் அறுவடைத் திருநாள் என்பர். இந்நாளில் வீடுகள் எல்லாம் களைகட்டும்.

இந்தாண்டு பொங்கல் விழாவானது ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குகிறது. அதுபோல், தைப் பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. 

தேதியும், காலமும்:
போகி பண்டிகை ஜனவரி 14 - ஞாயிற்றுக்கிழமை
சூரிய பொங்கல் ஜனவரி 15 - திங்கட்கிழமை
மாட்டுப் பொங்கல் ஜனவரி 16 - செவ்வாய்க்கிழமை
காணும் பொங்கல் ஜனவரி 17 - புதன்கிழமை

சூரிய பொங்கல் வைக்க ஏற்ற நேரம்: ஜனவரி 15ஆம் தேதி (தை முதல் நாள்) தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பொங்கல் வைக்க ஏற்ற நல்ல நேரம் காலை 6.30 முதல் 7.30 அல்லது 9.30 முதல் 10.30 வரையில் பொங்கலிடலாம். 

இதையும் படிங்க:  பொங்கல் அன்று வீட்டில் கட்டாயம் செய்ய வேண்டிய பாரம்பரிய உணவுகள்..

மாட்டுப் பொங்கல் வைக்க ஏற்ற நேரம்: ஜனவரி 16ஆம் தேதி (தை இரண்டாம் நாள்) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் வைக்க விரும்புவோர் காலை 11.00 முதல் மதிய வேளை 01.00 வரையான நேரத்தில் பொங்கல் வைக்கலாம். 

இதையும் படிங்க:  பொங்கல் 2024 : தேதி, வரலாறு, முக்கியத்துவம், கொண்டாட்டங்கள் மற்றும் பல...

தைப்பொங்கல் : தைப்பொங்கல் என்பது விவசாயத்தை கொண்டாடும் விழாவாகும். இந்நாளில், விவசாயத்திற்கு உதவியாக உள்ள இந்திர பகவான், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வழிபடுவதோடு மட்டுமின்றி, விவசாயத்திற்கு உதவும் கருவிகளையும் வைத்து வணங்குவார்கள். அன்றைய தினத்தில், கிராமங்களில் இருக்கும் மக்கள் அதிகாலமே எழுந்து சூரியபகவானை வணங்கி, குடும்பமாக இணைந்து பொங்கலிட்டு மகிழ்வார்கள். எனவே, இந்த தைப் பொங்கல் உங்கள் வாழ்வில் செழுமை மற்றும் இனிமையைக் கொண்டு வரட்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!