ஆந்தை மீது சவாரி செய்யும் ட்ராங்கோ! ஹைதராபாத் போட்டோகிராஃபருக்கு சர்வதேச விருது!

By SG Balan  |  First Published May 16, 2024, 1:47 PM IST

தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பரிசை வெல்வது இதுவே முதல் முறை. இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பிரிவுகளில் சுமார் 1.74 லட்சம் புகைப்படக் கலைஞர்கள் தாங்கள் எடுத்த படங்களை அனுப்பியிருந்தனர்.


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ஹரி கே. பதிபண்டா எடுத்த புகைப்படம் ஒன்று 4,65,000 புகைப்படங்கள் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் காட்டுயிர் பிரிவில் சிறந்த புகைப்படத்துக்கான பரிசை வென்றுள்ளது.

தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பரிசை வெல்வது இதுவே முதல் முறை. இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பிரிவுகளில் சுமார் 1.74 லட்சம் புகைப்படக் கலைஞர்கள் தாங்கள் எடுத்த படங்களை அனுப்பியிருந்தனர்.

Tap to resize

Latest Videos

47 வயதான தகவல் தொழில்நுட்ப நிபுணரான ஹரி, கடந்த குளிர்காலத்தில் ஹைதராபாத் அருகிலுள்ள விகாராபாத்தில் ஒரு கருப்பு ட்ரோங்கோ பறந்துகொண்டிருக்கும் மர ஆந்தை மீது அமர்ந்து சவாரி செய்வது போன்ற அற்புதமான காட்சியை படமெடுத்துள்ளார்.

பெண்களுக்கு மோடியின் கேரண்டி! அனைத்து பெண்களுக்கும் வருடம் ரூ.50,000 வழங்கும் சுபத்ரா யோஜனா!

லட்சக்கணக்கான புகைப்படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இது குறித்துக் கூறும் ஹரி, "கடந்த ஐந்து ஆண்டுகளாக பறவைகளுடன் பயணிப்பது உண்மையிலேயே மன அழுத்தத்தை குறைப்பதாக இருக்கிறது. ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பல்வேறு காரணங்களால் பறவைகள் வேகமாக குறைந்து வருகின்றன” என்று கூறுகிறார்.

"நான் வெற்றி பெற்ற போட்டியில் சிறப்பு என்னவென்றால், பிடித்த படத்துக்கு வாக்களிப்பவர்களுக்கு அந்தப் புகைப்படத்தை யார் யார் எடுத்தார்கள், எங்கே எடுத்தார்கள் என்று தெரியாது. இந்தச் சூழலில், எனது புகைப்படம் இந்தப் பாராட்டைப் பெறுவது உண்மையிலேயே ஒரு பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இது தெலுங்கானாவைச் சேர்ந்த பல திறமையான புகைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவ வேண்டும் என விரும்புகிறேன்" என்றுப் ஹரி தெரிவித்துள்ளார்.

விருது பெற்ற புகைப்படத்தை எடுத்தது பற்றிக் கூறும் ஹரி, "அன்று ஒரு மேகமூட்டமான நாள். நான் எதிர்பார்த்தபடியே ஆந்தைகள் வெளியே வந்தன. ஆனால் அவை மீண்டும் மீண்டும் ட்ரோங்கோக்களால் துரத்தப்பட்டன. இது போல ஐந்து அல்லது ஆறு பிரேம்களை படமாக்கியுள்ளேன். அதில் ஒன்று இந்த விருதைப் பெறுவது மிகவும் அதிர்ஷ்டவசமானது” என்று சொல்கிறார்.

கோடையில் கல்லா கட்டும் கேன் வாட்டர் பிசினஸ்! சென்னையில் தினமும் 30 மில்லியன் லிட்டர் விற்பனை!

click me!