Parenting Tips : பெற்றோர்களே! குழந்தைக்கு எந்த வைட்டமின் குறைபாட்டால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

First Published Mar 19, 2024, 1:20 PM IST


குழந்தைகளின் உடலில் எந்த வைட்டமின் குறைபாடும் இருந்தால் என்ன மாதிரியான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு வைட்டமி மிகவும் அவசியம். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் பற்றாக்குறையே காரணம். எனவே எந்தெந்த வைட்டமின் குறைவினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

வைட்டமின் ஏ - கண் பார்வை பிரச்சனை: இப்போதெல்லாம் குழந்தைகள் மொபைலில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே, குழந்தையின் கண்கள் பலவீனமாக இருந்தால், குழந்தையின் மொபைல் அல்லது ஸ்கிரீன் டைம் தான் காரணம் என்று நினைக்கிறோம். இருப்பினும், அதிக திரை நேரம் கண் பாதிப்புக்குக் காரணம் அல்ல. சில சமயங்களில் வைட்டமின் ஏ குறைபாடு கூட இதற்கு காரணமாகலாம். வைட்டமின் ஏ குறைபாடு குழந்தையின் பார்வை மங்கலாவதற்கு அல்லது தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.

வைட்டமின் பி1 - சோர்வு: பொதுவாகவே, குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாகவே இருப்பார்கள். அவர்கள் எளிதில் சோர்வடைய மாட்டார்கள். ஆனால், மாறாக, உங்கள் பிள்ளை விளையாடும்போது சோர்வாக இருந்தாலோ அல்லது கால்களில் வலி இருந்தாலோ, தசைகளில் விறைப்பு ஏற்பட்டால், அது நல்ல அறிகுறி அல்ல. இது வைட்டமின் பி1 குறைபாடு ஆகும். இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான வைட்டமின். குழந்தை மிகவும் சோர்வாக உணர்ந்தால் அதை எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
 

வைட்டமின் பி2 - வாய் புண்கள்: வாய் புண்கள் பொதுவானவை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் வைட்டமின் பி2 குறைபாடு வாய் புண்களை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. உங்கள் பிள்ளைக்கு அடிக்கடி வாய் புண்கள் ஏற்பட்டால், எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் உதவியுடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவும்.

வைட்டமின் கே - இரத்தம் நிற்காமல் வருவது: காயத்திற்குப் பிறகு, சிறிது நேரம் கழித்து இரத்தம் தானாகவே நின்றுவிடும். ஆனால் குழந்தைக்கு காயம் ஏற்படும் போது இரத்தம் மிகவும் தாமதமாக நின்றால், அது வைட்டமின் கே குறைபாடு தான் காரணமாகும்.. சில சமயங்களில் இந்த மாதிரி நிலைக்கு குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

இதையும் படிங்க:  குழந்தைகளிடன் ஏன் எதிர்மறைய எண்ணங்கள் வருகிறது தெரியுமா..? அதற்கான தீர்வு மிகவும் எளிது..!

]

கால்சியம் குறைபாடு - அடிக்கடி எலும்பு முறிவு: ஒரு குழந்தை ஓடும்போது அடிக்கடி விழுந்தால், அதை எப்போதும் சாதாரணமாகக் கருத வேண்டாம். இது கால்சியம் குறைபாடாக இருக்கலாம். குழந்தைக்கு பொதுமான அளவு கால்சியம் இல்லையென்றால், குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்படும். கால்சியம் குறைபாட்டால் குழந்தையின் வளர்ச்சியும் நின்றுவிடும். எனவே, நீங்கள் உங்கள் குழந்தையின் உணவில் கால்சியத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் மற்றும் நிச்சயமாக குழந்தையை ஒரு நிபுணரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

இதையும் படிங்க: உங்கள் குழந்தையும் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் முதல்ல 'இத' சொல்லி கொடுங்க!

இரும்புச்சத்து குறைபாடு - பசியின்மை: குழந்தை எதையும் சாப்பிடாது என்று பெற்றோர்கள் தயக்கமின்றி சொல்வது நவீன உலகில் நாகரீகமாகிவிட்டது. குழந்தை நீண்ட நேரம் பசியில்லாமல் இருப்பது அல்லது எடை அதிகரிக்காமல் இருப்பது, குறிப்பாக சுவரில் பெயின்ட் சாப்பிட்டால், அது இரும்புச்சத்து குறைபாடு தான் முக்கிய காரணம். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!