இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண வந்த பாகிஸ்தான் யூடியூபர் சுட்டுக் கொலை!

First Published Jun 11, 2024, 6:03 PM IST

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியை பார்க்க வந்த ரசிகர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்ப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

India vs Pakistan, T20 World Cup 2024

நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19ஆவது போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

India vs Pakistan, T20 World Cup 2024

இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாத் அகமத் என்ற யூடியூபர் நியூயார்க்கில் ஒரு வீடியோ எடுத்தார்.

India vs Pakistan, T20 World Cup 2024

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நியூயார்க் கடை வீதிகளில் வீடியோ எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் ஒருவரிடம் போட்டி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அந்த பாதுகாவலரோ பதில் அளிக்க மறுத்திருக்கிறார்.

IND vs PAK, T20 World Cup 2024

திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் ஷாக் அகமதுவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த நண்பர்கள் அகமதுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

T20 World Cup 2024

எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!