ஒருவர் நம் மீது உண்மையான அக்கறையும் அன்பும் வைத்திருப்பதை தெரிந்து கொள்ள சில விஷயங்கள் உள்ளன. அதை இங்கு காணலாம்.
ஒருவர் நம் மீது உண்மையான அக்கறையும் அன்பும் வைத்திருப்பதை தெரிந்து கொள்ள சில விஷயங்கள் உள்ளன. அதை இங்கு காணலாம்.
நம்மை ஒருவர் நேசிப்பதே அலாதி இன்பம் தான். எல்லா மனிதருக்குள்ளும் தன்னை ஒருவர் முழுமையாக நேசிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். ஆனால் எல்லாமே நேசம் தானா? சில அவர்களின் காரியத்திற்காக தான் நம்மிடம் பழகுவார்கள். அதை நாம் சில நேரம் அன்பு என நினைத்து கொள்வோம். அதனால் அவர்களுக்கும் சிரமம் நமக்கும் சிரமம். ஆகவே இங்கு உண்மையாக ஒருவர் நேசிப்பதை எப்படி கண்டறியலாம் என்பதை இங்கு காணலாம்.
கவிஞர் யாத்திரி எழுதிய கவிரை வரிகளில் இப்படியாக சொல்வார்," ஒருவரை நேசிக்கத் தொடங்குவது என்பது அவரை காலம் முழுக்க மன்னிக்கத் தயாராதல்"என்பது தான் அது. ஒருவரை நேசிப்பதுதான் அவரை மன்னிப்பதன் அர்த்தமாக இருக்கும். இது முதலாவது விஷயம். உங்களை ஒருவர் உண்மையாக நேசித்தால் 100 முறை லட்சம் முறை கூட மன்னிக்கத் தயாராக இருப்பார்.
இதையும் படிங்க: Relationship Tips : இந்த குணம் உள்ளவர்களிடம் காதல், டேட்டிங் என்று மாட்டிக்காதீங்க.. அவ்ளோதா சொல்லுவ..!
என்ன நடந்தாலும் அவர்களின் கவனம் உங்கள் மீது தான் இருக்கும். உங்கள் மீது அவர் எப்போதும் அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்வார். உங்கள் நலன் தான் அவர்களுக்கு முதன்மையாக இருக்கும். அதற்காக எதையும் செய்ய துணிவார்.
ஒருவரை சிரிக்க வைப்பது லேசான காரியம் இல்லை. அப்படியிருக்கும் போது உங்களுடைய சுமாரான ஜோக்கிற்கு கூட அவர் சிரித்தால் அவருக்கு உங்கள் மீது அளவில்லா ப்ரியம் இருப்பதாக அர்த்தம்.
எத்தனையோ நபர்கள் இருந்தாலும் அவர் உங்களை தான் தேடுவார். நீங்கள் இல்லாத இடங்களுக்கு செல்வதை விரும்பமாட்டார். எங்கு போனாலும் நீங்கள்தான் அவர்களுக்கு முதன்மையாக இருப்பீர்கள்.
இதையும் படிங்க: கணவன்மார்களே.. உங்க மனைவி கிட்ட இந்தமாதிரி நடந்துகோங்க.. உங்கள விட்டு பிரியவே மாட்டாங்க..!
நீங்கள் துன்பத்தை அனுபவிப்பதை அவர்களால் பொறுத்து கொள்ளமுடியாது. உங்களை தேடி வந்து ஆறுதல் சொல்வார்கள். உங்களிடம் அரவணைப்பாக நடந்து கொள்வார்கள். யாரிடமும் எதற்காகவும் உங்களை விட்டுக் கொடுக்க துணியமாட்டார்கள். எப்பாடுபட்டாவது உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களை குறைத்து பேசுபவர்களிடம் உங்களுக்காக சண்டை செய்வார்கள். நீங்கள் அவர்களுக்கு எப்போதும் ஸ்பெஷல் என உணர்த்துவார்கள்.
உங்களை கண்டாலே அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளுவார்கள். நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் உங்களுடைய பிரச்சனையை அறிவார்கள். உங்களுக்கு தோள் கொடுப்பார்கள். உங்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார்கள்.
உங்கள் மேல் கொஞ்சம் அதிகம் உரிமை கொள்வார்கள். நீங்கள் மற்றவர்களிடம் நெருங்கி பழகுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். நீங்களும் அவர்களும் அதிக நேரம் செலவிடுவதையே விரும்புவார்கள். இதெல்லாம் உங்கள் நேசமானவர்கள் உங்களுக்கு காட்டும் சில வெளிப்படையான அறிகுறிகள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D