தன் கணவர் குறித்த ரகசியத்தை அறிந்த பின்னர், அவருடன் ஒருநிமிடம் கூட வாழவே விருப்பமே இல்லை என கூறும் பெண்ணின் அனுபவ பகிர்வை இங்கு காணலாம்.
திருமண வாழ்வில் வெளிப்படைத் தன்மை அவசியம். ஏனென்றால் திடீரென வெளிவரும் உண்மைகள் தாங்க முடியாததாகவும், சமாதானப்படுத்த இயலாததாகவும் இருக்கும். உண்மையை மறைப்பதால் பல பொய்கள் சொல்ல வேண்டி வரும். இதனால் ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை இழக்கக் கூடும். முடிந்தவரையில் உண்மையாக இருப்பதே உறவுகளை கட்டிக்காக்கும். உண்மை நிலை தவறும்போதும், போலியான அன்பை காட்டும் போதும் அந்த உறவுக்கு மதிப்பு இல்லாமலே போய்விடுகிறது. இங்கு ஒரு பெண்ணுக்கு நடந்த சம்பவமும் அப்படிதான்.
"எங்களுக்கு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றில் பொருத்தம் பார்த்து செய்யப்பட்ட முழுமையான அரேஞ்ச் மேரேஜ். என் கணவரை நான் ஆரம்ப காலம் முதலே நேசித்தேன். அவர் தான் என் முதல் காதலாக இருந்தார். அவரை எல்லா கோணங்களிலும் நான் காதலிக்கத் தொடங்கினேன். அவரும் என்னிடம் அன்பாக இருப்பார். ஆனால் அந்த அன்பெல்லாம் உண்மை இல்லையோ என்று இப்போது தோன்றுகிறது.
என் கணவரின் எதிர்பார்ப்புகள் எப்போதும் என் ரசனைகளை ஒத்திருந்தது இல்லை. நான் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. நாம் எல்லோருமே தனித்தனியானவர்கள் தானே. ஏன் ரசனைகள் ஒத்து போகவேண்டும் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். ஆனாலும் அவர் தேவையில்லாமல் சண்டையிடுவார். நான் என்ன தவறு செய்தேன் என்பதை சொல்லவுமாட்டார். எல்லாவற்றுக்கும் பிறகும் அவரை நேசித்தேன். ஆனால் அதனால் பலன் ஒன்றும் இல்லை. சில நேரம் அன்பாக இருந்தாலும் பல வேளைகளில் சண்டைதான். எனக்கு காரணம் புரியவில்லை.
இதையும் படிங்க: நிர்வாணமாக தூங்க அடம்பிடிக்கும் கணவன்.. அதுக்கு வேலைக்கார பெண் சொன்ன விஷயம்.. குமுறும் பெண்
ஒருநாள் எதேச்சையாக அவருடைய மொபைலை பார்க்க நேர்ந்தது. அதில் அவருடைய முன்னாள் காதலிக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், எனக்கு அவர் பரிசளித்த வாசனை திரவியம் குறித்து குறிப்பிட்டிருந்தார். 'நீ பயன்படுத்தும் பெர்ஃப்யூம் தான் (perfume) என் மனைவிக்கு வாங்கி கொடுத்திருக்கிறேன். இனி வீடெங்கும் உன் வாசனையாக இருக்கும்"என சொல்லியிருந்தார். அதை பார்த்தபோது என் மனம் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.
இத்தனை நாளாக அவர் என்னை காதலிக்கவே இல்லையோ என தோன்றுகிறது. அவர் இன்னும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருக்கும்பட்சதில் எனக்கு உண்மையாக இல்லை என்ற உணர்வு என்னை சித்திரவதை செய்கிறது. அவருடன் பேசவே விருப்பம் இல்லை. நான் என்ன செய்வது"எனக் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கணவர் என் உள்ளாடைகளை அணிகிறார்'- அதை பார்த்தாலே... புலம்பும் பெண்.. எதனால் தெரியுமா?
மனநல ஆலோசகரின் பதில்: உங்களுக்கு இந்த தருணம் கடினமானதாக இருக்கும். ஆனாலும் தைரியமாக இருங்கள். திருமணத்திற்கு பின் உங்களுடைய கணவர் முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருப்பது தவறான விஷயம் தான். அவர் நட்புரீதியாக பேசியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர் இன்னும் அந்த பெண்ணுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதுபோல தெரிகிறது. இது தவறான செயல். எந்த உறவுக்கும் நேர்மையாக இருப்பது அவசியம். உங்களுடைய கணவரிடம் நீங்கள் பேசாமல் இருப்பதால் எந்த தீர்வும் கிடைக்காது. அவரிடம் இது குறித்து பேசுங்கள். நீங்கள் பார்த்த விஷயங்களை பொறுமையாக கேளுங்கள். அவர் உங்களுக்கு எப்படியான விளக்கம் கொடுக்கிறார் என்பதை கவனியுங்கள்.
உங்களை வெளியுலக பார்வைக்கு மட்டும் மனைவியாக வைத்திருப்பது தான் அவரது நோக்கம் என்றால், அது குறித்து பேசி முடிவு எடுங்கள். உங்கள் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் தான் முக்கியம் என உங்களிடம் சரணடைந்தால் அவரை மன்னிக்க முயற்சி செய்யுங்கள். ஆனால் அவர் சொல்லும் காரணங்கள் உங்கள் மனதுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டும் அதை செய்யுங்கள். ஏன் அவர் சண்டையிடுகிறார்? திருமணத்திற்கு பின்பும் முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருக்க என்ன காரணம் என்பதை கேட்டு தெளிவு பெறுங்கள். பின் நல்ல முடிவு எடுங்கள். மேலும் உதவியும் ஆலோசனையும் தேவையெனில் அருகில் உள்ள மனநல ஆலோசகரை அணுகுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D