தெரியாமல் துரோகம் செய்துவிட்டால்.. அதன் பின்னர் உங்க துணையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?? 

By Asianet Tamil  |  First Published Jul 2, 2024, 9:45 PM IST

ஒருவர் காயப்பட்டால் அதை சரி செய்வது சாத்தியமான ஒன்று. ஆனால் துரோகம் செய்தது தெரிய வந்தால் அதை விட மோசமான விஷயம் வேறொன்றும் இல்லை. 


எந்த உறவும் நேர்மையாக இருப்பது அவசியம். காதல், திருமண உறவு மட்டுமல்லாமல் துரோகம் எல்லா உறவுகளிலும் ஏற்படுகிறது. துரோகத்தினால் ஒருவருக்கு தாங்க முடியாத அதிர்ச்சி, வேதனை, கோபம், அவநம்பிக்கை போன்றவை ஏற்படும். துரோகம் செய்த பின்னர் இருவர் அதே உறவை தொடர்வது என்பது சாத்தியம் என்றாலும், கொஞ்சம் கடினமான விஷயம். இது திருமண வாழ்க்கையை பொருத்தவரை துரோகம் செய்தவருடைய சுயமதிப்பு முழுவதும் கேள்விக்குள்ளாகிறது.  அவர் மீது ஏற்படும் அவநம்பிக்கை நீண்ட காலம் மாறாமல் இருக்கிறது. 

திருமண உறவில் துரோகம் நிகழும் போது அந்த உறவை தொடரலாமா? வேண்டாமா? என்பது ஒவ்வொரு நபருக்கும், அவர்களுக்குள் ஏற்படும் துரோகத்தையும் பொறுத்து மாறுபடு. ஆனால் அப்படி அந்த உறவை தொடர்ந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: செக்ஸ் வைத்து கொள்ளும் முன்பு செய்யவே கூடாத விஷயம் என்ன தெரியுமா?

ஒருவர் துரோகம் செய்த பின்னர் அந்த உறவை மீண்டும் புதுப்பிக்க நினைத்தால் அந்த நபரின் நோக்கத்தை பொறுத்து நாம் முடிவு செய்ய வேண்டும்.  அவர்கள் தங்களுடைய குற்றத்தை மறைக்க நினைக்கிறார்களா அல்லது உண்மையில் அந்த உறவை காப்பாற்றிக்கொள்ள தங்களுடைய தவறை திருத்த முயன்றார்களா?  என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். துரோகத்தை அனுபவித்து அதனை மன்னிக்கும் தரப்பினர் தங்களின் உணர்வுகளை அதன் பிறகு கட்டுப்படுத்த முடியுமா, கடந்த காலத்தை மறக்க முடியுமா? மீண்டும் அந்த உறவை ஆரோக்கியமான முறையில்  கொண்டு செல்ல முடியுமா என பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க:  திருமணமானவர்கள் யாருக்கும் சொல்லவே கூடாத 5 விஷயங்கள் பத்தி தெரியுமா? மீறி பகிர்ந்தால் வாழ்க்கையே போச்சு!!

ஏனென்றால் சில நேரங்களில் நம்மால் மன்னிக்க முடியும் ஆனால் எதையுமே மறக்க இயலாது. துரோகம் மனதை நொறுக்கும். தாங்க முடியாத வேதனையை தரும். அன்பும், உண்மையான முயற்சியும் தான் அந்த உறவை மீட்டெடுக்கும். 

துரோகம் செய்த நபர் அதன் பிறகு அந்த உறவை மீட்டெடுக்க செய்ய வேண்டியவை:

1. உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி, உங்களின் துரோகம் குறித்து மற்றவர்களுக்கு தெரிய வருவதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் குறித்து சிந்தியுங்கள். 

2. எப்போதும் உங்களுடைய உணர்வுகளுடன் நேர்மையாக இருங்கள். உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை நியாயமாக சிந்தித்து, அந்த உறவை சரிசெய்ய  வேண்டிய உணர்வுபூர்வமான வேலைகளை செய்யுங்கள்.  

3. உங்களின் மீதான பச்சாதாபத்தை குறைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு நேரும் பழி, சாக்குப்போக்குகளுடன் நீங்கள் இழைத்த துரோகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

4. உங்களுடைய துணையிடம் துரோகம் குறித்து முறையான விளக்கத்தை கொடுங்கள்.  அவர்களிடம் மனம் விட்டு பேசுவது உங்களுக்கு சரியான முடிவு எடுப்பதற்கு உதவியாக இருக்கும். 

5. உங்கள் துணையிடம் உங்களுடைய உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்துங்கள்.  சில நேரங்களில் வார்த்தைகளில் சொல்ல முடியாததை, உங்களுடைய உணர்வுகள் வெளிப்படுத்தும்

6. உங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடுவது வழக்கப்படுத்துங்கள். முக்கியமான  தேதிகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணை தயாராக இருக்கும்போது அவரை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். அது அவர்களுக்கு பிடித்த இடமாக இருப்பது நல்லது. 

7. உங்களுடைய துரோகம் துணையை அதிகமாக காயப்படுத்தி இருக்கும். அதனால் பொறுமையாக இருப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அவருடன் நேரம் செலவிட விரும்பினாலும், உங்களிடம் நெருங்குவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படலாம் அதனால் பொறுமையாக இருங்கள். 

8. எப்போதும் உங்களுடைய துணையும் தவறுகளை மன்னிக்க தயாராக இருக்க வேண்டும்.  அப்போதுதான் உறவு சமநிலையுடன் இருக்கும். மற்றவர்களை மன்னிப்பது போல உங்களையும் நீங்கள் மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் துரோகத்தை அனுபவித்து இருந்தாலும் அல்லது நீங்களே துரோகியாக இருந்தாலும் மன்னிக்க தயாராக இருக்க வேண்டும். 

9.  துரோகத்தை செய்பவர்களுக்கும் துரோகத்தை அனுபவிப்பவர்களுக்கும் மனதளவில் பிரச்சனைகள் ஏற்படலாம் உங்களுடைய மனநலனுக்காக இருவருமே நல்ல ஆலோசனை சந்திப்பது உதவியாக இருக்கும்.

துரோகம் என்பது பல்வேறு விதங்களில் செய்யப்படுகிறது. திருமணத்தை மீறிய வகையில் ஒருவருடன் உடலளவில் உறவு கொள்வது மட்டும் துரோகம் இல்லை, மாறாக தன் துணைக்கு தெரியாமல் வேறு ஒருவரோடு எந்த விதத்தில் தொடர்பில் இருந்தாலும், அது துரோகமாக தான் கருதப்படுகிறது. ஒருவர் தனக்கும் தன்னுடைய துணைக்கும் நேர்மையாக இருப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவை மீட்டெடுக்க முடியும்.  

நம்முடைய தவறு ஒப்புக்கொள்வதும் அதை திருத்திக் கொள்வதும் உறவில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. ; உறவில் இரண்டாவது வாய்ப்பு எடுத்துக் கொள்வது தவறில்லை ஆனால் எப்போதுமே தவறு செய்து கொண்டே இருப்பது மோசமான விஷயம். இதனால் உங்களுடைய துணைக்கு உங்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும்.  உங்களுடன் இணைந்து வாழ நீண்ட காலம் தேவைப்படும். நீங்கள் துரோகம் செய்துவிட்டால் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இருங்கள். மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்.  அது இருவருக்கும் விடுதலையாக இருக்கும்.

click me!