Micro Cheating : மைக்ரோ சீட்டிங் என்றால் என்ன? அதை செய்வதால் வாழ்க்கையில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் என்னென்ன? துணைக்கு அது ஏன் பிடிப்பதில்லை என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.
இன்றைய நவீன யுகத்தில் ஒருவருடன் உறவுகளை ஏற்படுத்தி கொள்வது எளிதாகிவிட்டது. அதே சமயம் அதை முறித்து கொள்வதும் எளிமையாகிவிட்டது. திருமணத்தை மீறிய உறவு என்பது வெறும் உடலுறவு மட்டுமில்லை. மற்ற சில விஷயங்களும் துரோகம் தான். உதாரணமாக, உங்கள் துணையின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடாதது அல்லது மற்ற நபர்களின் கவர்ச்சியான படங்களை விரும்புவது கூட உங்கள் உறவில் பிரச்சனைகளை உண்டாக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இப்படி சமூக ஊடகங்களில் நடக்கும் சில விஷயங்களை தான் 'மைக்ரோ- சீட்டிங்' என அழைக்கிறார்கள்.
மைக்ரோ- சீட்டிங் என்பது மிகச்சிறிய அளவில் ஏமாற்றுவது ஆகும். ஒரு நபரின் சிறிய செயல்களே அதில் ஏமாற்று காரணியாக இருக்கும். இது பெரிய துரோகமாக கருதப்படாவிட்டாலும் மோசமான விஷயமாகவே இருக்கிறது. இது உங்களின் துணைக்கு துரோகம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
undefined
இதையும் படிங்க: உங்க துணைக்கு இந்த ஒரு விஷயம் தெரியாமல் பார்த்துக்கோங்க!! தெரிஞ்சா உங்க நிலைமை அவ்ளோதான்
மைக்ரோ சீட்டிங் என்பது உடலளவில் துரோகம் செய்யாவிட்டாலும், சிறிய அளவில் செய்யும் நம்பிக்கை மீறலை குறிக்கும். இதை செய்வதால் உங்களுடைய துணைக்கு நீங்கள் உணர்ச்சி ரீதியாக அசௌகரியத்தை ஏற்படுத்துவீர்கள். இந்த மைக்ரோ சீட்டிங் ரொம்ப காலமாக இருந்தால் அது காதல் உறவை முறிக்கும். சில உதாரணங்களை இங்கு காணலாம்.
இந்த மைக்ரோ சீட்டிங் மேலோட்டமாக பெரிய விஷயமாக தெரியாவிட்டாலும், அது காதல் உறவில் துணையிடம் நம்பிக்கையின்மைக்கு வாய்ப்பு வழங்கும். அதனால் ஒருவர் தங்களுடைய உறவில் இருக்கும் அடிப்படை சிக்கல்களை உடனே பேசி தீர்த்து கொள்ள வேண்டும். எந்த உறவுனாலும் மனம் திறந்து நேர்மையுடன் தெளிவான உரையாடல் மேற்கொண்டால் நலமாக இருக்கும்.
இதையும் படிங்க: Extra Marital Affairs : கள்ள உறவுக்கு இப்படியுமா காரணங்கள் இருக்கு..?
இருவருக்கும் ஏமாற்றம் ஏற்படுவதை விட விவாதித்து நல்ல முடிவு எடுப்பது மிக அவசியம். ஏனென்றால் இவரில் ஒருவர் மைக்ரோ சீட்டிங்கை கண்டு கொள்ளவில்லை என்றாலும் மற்றொருவரை மனதளவில் பாதிக்கும். அதனால் நீங்கள் இப்படி செய்தால் மாற்றி கொள்ளுங்கள்.