'கணவர் என் உள்ளாடைகளை அணிகிறார்'- அதை பார்த்தாலே... புலம்பும் பெண்.. எதனால் தெரியுமா?
தன் உள்ளாடைகளை கணவர் அணிய விரும்புவதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.

relationship advice
"என்னுடைய திருமண வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் எதேச்சையாக எங்களுடைய படுக்கையறைக்குள் நுழையும் போது என் கணவர் என் உள்ளாடைகளை அணிவதை கண்டேன். அவர் இதை ரகசியமாக தான் செய்தார். ஆனால் அதை கண்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது" இந்த சூழ்நிலையில் தான் என்ன செய்ய வேண்டும்? என அந்த பெண் பகிர்ந்தார்.
relationship advice
இதற்கு மனநல ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார். அந்த பெண்ணுக்கு இது மிகவும் கடினமாக தான் இருக்கும். எந்த பெண்ணும் தன் கணவர் அவர்களின் உள்ளாடைகளை அணிவதில் விருப்பம் கொள்ளமாட்டார்கள். இந்த சூழ்நிலையில் முதலில் அவர்களின் உறவில் இருக்கும் பிரச்சனைகள், தனியுரிமை ஆகியவை குறித்து சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
relationship advice
உங்களுடைய கணவர் எவ்வளவு காலமாக இப்படி செய்கிறார் என்பது உங்களுக்கு தெரியாதபட்சத்தில், நீங்கள் கேள்வி கேட்கும் முன்பு கவனமாக இருக்க வேண்டும். ஏன் உங்கள் உள்ளாடைகளை அணிகிறார்? என்பதை கனிவாக கேட்க முயற்சி செய்யுங்கள். சில நபர்களுக்கு இந்த மாதிரி முயன்று பார்ப்பதில் த்ரில் இருக்கும். ஒரு ஆர்வத்தில் செய்பவர்களும் உண்டு. இதனால் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஃபெடிஷ் என்பது நபருக்கு நபர் வேறுபடும். உங்கள் கணவர் இதனை செய்ய அவருக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என தெரிந்து கொள்ளுங்கள்.
relationship advice
உங்களால் அவர் சொல்லும் காரணத்தை ஏற்று கொள்ள முடிந்தால் அதனை சரி செய்ய முயலுங்கள். சிலருக்கு பெண்களில் உள்ளாடைகளை அணிவது தங்கள் கற்பனையின் ஒரு பகுதியாக கூட இருக்கும். அவரை குறித்து நீங்கள் முன்முடிவுக்கு வருவதை காட்டிலும், அவரை புரிந்து கொள்ளும் மனநிலையுடன் உரையாடலை தொடங்குங்கள்.
இதையும் படிங்க: ஆண்களை விட பெண்களுக்கு தான் செக்ஸ் ஆசை அதிகம் வருமாம்.. அது ஏன் தெரியுமா..?
relationship advice
உங்களுடைய கணவர் உள்ளாடைகளை அணிவதற்கான காரணங்கள், உணர்வுகள், உந்துதல்களைக் குறித்து மனம் விட்டு பேச அவருக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். அவருடைய உரையாடலை கனிவுடன், பச்சாதாபத்துடன் அணுகுவது முக்கியம்.
இதையும் படிங்க: உங்க துணையுடன் செக்ஸ் வைக்குறத விட இது முக்கியம்... இந்த 1 விஷயம் செய்தால் அவ்ளோ நன்மை!!
relationship advice
உங்கள் கணவர் இப்படி செய்வது உங்களுக்கு தொந்தரவாக இருப்பதை தெரிவியுங்கள். உங்களுடைய உறவில் அது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து உரையாடுங்கள். உங்கள் இருவருடைய உணர்வுகள் குறித்து விழிப்புணர்வோடு செயலாற்றுங்கள். உங்கள் கணவர் ஆசையை மதிக்கும் தீர்மானத்தைத் தேடுங்கள். உங்கள் இருவருக்கும் பாதகமில்லாத முடிவை கண்டறியுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D