Google: மொபைல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. ஏப்ரல் 2 முதல் இந்த சேவையை நிறுத்துகிறது கூகுள்..

First Published Apr 2, 2024, 8:36 AM IST

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஏப்ரல் 2 முதல் இந்த சேவையை நிறுத்துகிறது. இது தொடர்பான முக்கிய அப்டேட்டை தெரிந்து கொள்ளுங்கள்.

Google

கூகுள் என்ற மாபெரும் நிறுவனமானது மக்களுக்கு பல வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இன்று, கிட்டத்தட்ட ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனரும் யூடியூப், ஜிமெயில், குரோம், கூகுள் டாக்ஸ் போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர் என்று சொல்லலாம்.

Google Podcast App

நீங்களும் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் பயன்படுத்தினால், இந்த செய்தி உங்களுக்கானது தான். உண்மையில், கூகுள் அதன் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றை ஏப்ரல் 2, 2024 முதல் நிறுத்தப் போகிறது.

Google Podcast

இது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே கூகுள் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. இப்போது அதன் காலக்கெடு நெருங்கிவிட்டது. ஏப்ரல் 2, 2024க்குப் பிறகு உங்களால் அதைப் பயன்படுத்த முடியாது.

YouTube Music

நீங்கள் கூகுள் பாட்காஸ்ட்களைப் பயன்படுத்தினால், அதில் உங்கள் தரவு இருந்தால், அதை உடனடியாக யூடியூப் மியூசிக்கிற்கு மாற்ற வேண்டும் என்று கூகுள் கூறியுள்ளது.

Google Podcast App Subscription

கூகுள் படி, பயனர்கள் மார்ச் 2024 வரை மட்டுமே பாட்காஸ்ட்களைப் பயன்படுத்த முடியும், அதே நேரத்தில் அதன் பயனர்கள் ஜூலை 2024 வரை மெம்பர்ஷிப்பை மாற்ற முடியும்.

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

click me!