Today School Leave: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

First Published Feb 3, 2024, 6:37 AM IST

சென்னையில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இன்று திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Michaung Cyclone

மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தண்ணீரால் சூழ்ந்தது. இதனையடுத்து இந்த 4 மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

School Student

இதனை ஈடுசெய்யும் விதமாக சென்னையில் 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று (சனிக்கிழமை) பள்ளிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் தகவல்.!

Today Chennai School Leave

இந்நிலையில் இன்று கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு நடைபெற உள்ளதால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!