Modi : ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை.. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா - அரங்கை நிறைத்த சினி பிரபலங்கள்!

Jun 9, 2024, 8:03 PM IST

இன்று ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். டெல்லி நகரமே இன்று விழாக்கோலம் கொண்டுள்ளது என்றே கூறலாம். 

தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேரு மாநிலங்களில் இருந்து பல துறை சார்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இந்த பதியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி அவர்கள் பதவிப்பிரமாணம் செய்தார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் பதவி பிரமாணம் ஏற்று வருகின்றனர்.  
 
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார், இருப்பினும் இந்த முறை அவர் தனது கட்சியான பிஜேபியுடன் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெரிதும் நம்பியுள்ளார் என்றே கூறலாம். பாஜக இந்த முறை 240 இடங்களை வென்றுள்ளது, அது 272 என்ற பெரும்பான்மையை விட 32 குறைவு. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் ஐக்கிய (ஜேடியு) ஆகியவை கூட்டணிக் கட்சிகளாக உள்ளன.