இந்த பதிவில் சுரைக்காயில் சப்பாத்தி எப்படி செய்வது என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்..
உங்கள் வீட்டில் இன்று காலை சப்பாத்தி செய்கிறீர்கள் என்றால், எப்போதும் போல செய்யாமல், புதுவிதமான ஸ்டைலில் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், அது எப்படி செய்வது என்று தெரியவில்லையா..? உங்களுக்கான பதிவு தான் இது..
உங்கள் வீட்டில் சுரைக்காய் இருக்கிறதா..? அப்படியானால், அந்த சுரைக்காயில் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள். என்ன சுரைக்காயில் சப்பாதியா..? என்று நீங்கள் நினைக்கிறீர்களா ரொம்பவே சுவையாக இருக்கும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. கோடை காலத்தில் இந்த சுரைக்காய் சப்பாத்தியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் சுரைக்காயில் சப்பாத்தி எப்படி செய்வது என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்..
undefined
இதையும் படிங்க: சத்தான காலை உணவு சாப்பிட விரும்பினால் ராகி புட்டு செய்ங்க.. ரெசிபி இதோ!
சுரைக்காய் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சுரைக்காய் - 300 கிராம்
இஞ்சி - 3 துண்டு
பூண்டு - 7
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: குழந்தைகளுக்குப் பிடித்த பூரி! ரவையில் ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!
செய்முறை:
சுரைக்காய் சப்பாத்தி செய்ய முதலில், சுரைக்காயில் இருந்து தோலை நீக்கி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.பிறகு, ஒரு மிக்ஸி ஜாரில் வெட்டி வைத்த சுரைக்காய் துண்டுகள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு, எடுத்து வைத்த கோதுமை மாவு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ளுங்கள்.
பிறகு சப்பாத்தி மாவை பிசைந்த பிறகு எண்ணெய் தடவி, மூடி போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். 20 நிமிடம் கழித்து சப்பாத்தி மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, இதிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து மெல்லியத்காக சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளுங்கள். இப்படியே எல்லா உருண்டைகளையும் தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு சப்பாத்தி கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தி மாவை போட்டு எண்ணெய் தடவி முன்னும் பின்னுமாக திரிப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் அட்டகாசமானது சுவையில் சத்தான சுரக்காய் சப்பாத்தி ரெடி!!! இதற்கு சைட் டிஷ் ஆக உங்களுக்கு பிடித்ததை வைத்து சாப்பிடுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D