Latest Videos

வீட்ல காய்கறி இல்லையா? அப்ப இந்த  வெந்தய குழம்பு செய்து சாப்பிடுங்க.. ஆரோக்கியத்திற்கும் நல்லது!

By Kalai SelviFirst Published Jun 10, 2024, 2:31 PM IST
Highlights

இந்த பதிவில் வெந்தய குழம்பு எப்படி செய்வது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்னைக்கு மதியம் சாப்பாட்டுக்கு என்ன குழம்பு வைக்க காய்கறி ஏதும் இல்லையா..?  என்ன செய்வது என்று தெரியவில்லையா..? உங்களுக்கு அந்த பதிவு தான் இது.

உங்க வீட்டில் வெந்தயம் இருக்கிறதா..? அப்படி இருந்தால் அதில் சுவைமிகுந்த வெந்தய குழம்பு செய்து சாப்பிடுங்கள்.  இந்தக் குழம்பு செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. மேலும் இந்த வெந்தய குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். இந்த குழம்பை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் வரை பெரியவர்கள் வரை நான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த குழம்பு 3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் வெந்தய குழம்பு எப்படி செய்வது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா இப்படி செஞ்சு பாருங்க.. சுவை டக்கரா இருக்கும்!

வெந்தயக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 1ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 20 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 ஸ்பூன்
சீராக தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 2 
தக்காளி - 2 
எண்ணெய் - தேவையான அளவு
புளி கரைசல்
கொத்தமல்லி இலைக - சிறிதளவு

இதையும் படிங்க:  குடைமிளகாயில் ஒருடைம் இப்படி சாதம் செய்யுங்க.. செம ருசியாக இருக்கும்!

செய்முறை:
வெந்தயக் குழம்பு செய்ய முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு, எடுத்து வைத்த வெந்தயம், கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர், ஊறித்து வைத்த  சின்ன வெங்காயத்தை இதனுடன் சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள். சிறிது நேரம் கழித்து, பூண்டையும் இதனுடன் சேர்த்து வதக்கவும்.  

சின்ன வெங்காயத்தை, பூண்டு இரண்டும் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு, பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை இவற்றுடன் சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள். பின் பொடியாக நறுக்கிய தக்காளியையும்  இதனுடன் சேர்த்து வதக்குங்கள். 
தக்காளி நன்கு மசிந்த பிறகு, அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சீராக தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். இப்பொழுது, அடுப்பில் தீயை குறைத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். பின் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்து, கிளறிவிடுங்கள். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி கொதிக்க வையுங்கள். 10 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி கீழே இறக்கி வைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான வெந்தயக் குழம்பு ரெடி!!! சூடான சாதத்தில் இதை ஊற்றி சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்..

வெந்தயம் நன்மைகள்:

  • வெந்தயத்தில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. மேலும், இது ஆக்ஸிஜனேற்ற, ஆன்டிகார்சினோஜெனிக் மற்றும் ஆண்டிடியாபெடிக் பண்புகளைக் கொண்டுள்ளது.
  • மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் வெந்தயம் பெரிதும் உதவுகிறது.
  • இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள வெந்தயத்தில் ஒருமுறையாவது இந்த குழம்பு செய்து சாப்பிட்டுங்கள். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!