டிரைவர் அடித்த திடீர் பிரேக்.. பின்னால் வந்து மோதிய அரசு பேருந்து.. காரில் இருந்தவர்களின் நிலைமை என்ன?

Jun 9, 2024, 1:05 PM IST

அரியலூர் மாவட்டம்  மீன்சுருட்டி அருகே விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசிக்கும் குரு பிரசாத் என்பவர் தனது காரில் வேலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி முன்னே சென்று கொண்டிருந்தார். 

அப்போது ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி கடைவீதி அருகேயுள்ள வேகத்தடையில் வந்தபோது காரை ஓட்டி வந்த குரு பிரசாத் பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து பட்டுக்கோட்டை இழந்து முன்னே சென்ற கார் மீது  மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குரு பிரசாத் உள்ளிட்ட 3 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.