Samantha: அதீத அன்பினால் வந்த காதல்...சமந்தாவின் லேட்டஸ்ட் போஸ்ட் பார்த்து குழம்பிப்போன நெட்டிசன்கள்..

First Published May 20, 2022, 11:41 AM IST

Samantha: நடிகை சமந்தா 'குஷி' என்ற படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

samantha

தமிழ் சினிமாவிற்கு, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் சமந்தா. இன்று பான் இந்தியா நடிகையாக வளர்ந்து கொடி கட்டி பறக்கிறார். தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்து  ஹிட் கொடுத்தவர்.
 

samantha

கடந்த 2017ம் ஆண்டு, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை 7 வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு, வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார். குறிப்பாக, இவரது நடிப்பில் வெளியான ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள்  சமந்தாவிற்கு  இந்தியா நாயகியாக அந்தஸ்தை பெற்று தந்தது.

samantha

கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா, நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்துக்கு பின் கவர்ச்சி பக்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ''ஓ சொல்றியா மாமா பாடல்'' பட்டி தொட்டி எங்கும் பரவி இளசுகளின் மனதை கொள்ளை கொண்டது.

samantha

34 வயதே ஆகும் சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில், வெளியான' காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான நாள் முதல், தமிழ் இளசுகள் சமந்தா பீவர் பிடித்து போய் திரிகின்றனர். 
 

samanth

தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் சமந்தா, தெலுங்கில் யசோதா, சகுந்தலம், ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இவர், ஹாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துவிட்டார். 

Samantha

இதுதவிர, சமந்தா தற்போது குஷி என்ற படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். விஜய் நிர்வானா இயக்கத்தில் உருவாகும்  இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 
 

Samantha

இந்த படத்தில், விஜய் தேவரகொண்டா உடன் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, எடுத்த வீடியோவை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அவர் 'அதீத அன்பினால் வந்த காதல் இது' என்றும், இந்த காதல் திரைப்படத்தை  கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாளில் ரிலீஸ் செய்ய உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் படிக்க...என்ன அமீர் இப்படி பண்ணிட்டீங்க..?.தப்பிக்க வழி இல்லாமல் கண்ணீர் விட்டு கதறும் பாவினி...கண்டிக்கும் பிரியங்கா..

click me!