40ஐ நெருங்கும் வயது... ஹீரோயின் மவுசு குறைந்துவிட்டதா? பிரபல ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா..!

First Published Dec 6, 2023, 11:56 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகருக்கு அக்காவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

Nayanthara

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆனார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் கதையில் திருப்தி இல்லை எனக்கூறி விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம். இதையடுத்து ஓராண்டாகியும் தன்னுடைய அடுத்தபடம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

vignesh shivan, Nayanthara

அவர் இயக்க உள்ள அடுத்த படத்தில் லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் டிராப் ஆன நிலையில், அந்தக் கதையை தான் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுக்க உள்ளாராம் விக்கி. இப்படத்திற்கு எல்.ஐ.சி என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Pradeep Ranganathan, vignesh shivan

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர இயக்குனர் மிஸ்கின், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளாராம்.

vignesh shivan next movie with Pradeep ranganathan

இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் நடிக்க உள்ள கேரக்டர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக இப்படத்தில் நடிக்க உள்ளாராம் நயன். ஹீரோயினாக மவுசு குறைந்ததால் அவர் இப்படி அக்கா வேடங்களில் நடிக்க முடிவெடுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் சம்பளத்தில் கைவைக்க போகிறாரா கமல்ஹாசன்? எஸ்.கே.21 படத்துக்கு வந்த புது சிக்கல்

click me!