YouTuber Felix Gerald: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு பண்ணையில் கன்டெய்னர்.. சிக்கியது என்ன? பரபரப்பு தகவல்!

By vinoth kumar  |  First Published May 18, 2024, 10:22 AM IST

தனியார் யூடியூப் சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது சேனலில் வெளியிட்டார். 


யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கன்டெய்னர் காட்டேஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தனியார் யூடியூப் சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது சேனலில் வெளியிட்டார். அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது. யூடியூப் சேனலின் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரை டெல்லி வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்! ஒரு நைட்டுக்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிசினஸ்க்கு ஆப்பு!

அதனை தொடர்ந்து ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களாக போலீசார் சோதனை செய்து வருகின்றனர், அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டசேரி என்னும் கிராமத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் தற்காலிக கண்டெய்னர் வீட்டில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஆவணங்கள் ஏதும் வைத்துள்ளார்களா என சோதனை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:  School College Holiday: மே 29-ம் தேதி விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

இந்த சோதனையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை துணை கண்காப்பாளர் மணிகண்டன் தலைமையில் திருச்சி சோதனை செய்யும் காவல்துறையினர்  ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி ஜேன் ஃபெலிக்ஸ் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிவில் எந்த ஆவணங்களும் கிடைக்காமல் திரும்பி சென்றனர்.

click me!